Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

27 November 2011

அஜீத் ரீமேக்கில் நடிக்கவில்லை !

பவன் கல்யான் நடிப்பில் தெலுங்கில் வெளிவர இருக்கும் படம் ' பாஞ்சா '. விஷ்ணுவர்தன் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் பாடல்களுக்கு தெலுங்கில் வரவேற்பு கிடைத்து இருக்கிறது.


அஜீத் நடிக்கும் அடுத்த படத்தினை இயக்க இருக்கிறார் விஷ்ணுவர்த்தன். ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார். ' பாஞ்சா ' படத்தின் தமிழ் ரீமேக்கை தான் அஜீத்தை வைத்து இயக்க இருக்கிறார் விஷ்ணுவர்த்தன் என செய்திகள் வலம் வந்தன.


இந்நிலையில் ' பாஞ்சா ' படத்தின் தயாரிப்பாளர்கள் அப்படத்தினை தமிழில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார்கள். தமிழ் டப்பிங் படத்திற்கு ' குறி ' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

டிசம்பர் 9ம் தேதி 'பாஞ்சா' வெளியாக இருக்கிறது. தற்போது தான் தமிழ் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதால் ஜனவரியில் தமிழ் டப்பிங்கான 'குறி'யை வெளியிட இருக்கிறார்கள்.

இதன் மூலம் பாஞ்சா படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜீத் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...