Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

27 November 2011

எல்லாம் விளம்பரம் தான் !

ஷாருக்கான் தான் நடித்து தயாரித்த 'ரா.ஒன்' படத்தினை விளம்பரப்படுத்திய விதம் பலரையும் வியக்க வைத்தது. YOUTUBE, GOOGLE, என பல தளங்களில் தனது படத்தினை விளம்பரப்படுத்தினார்.

தமிழ் திரையுலகினர் பிரம்மாண்டமான படங்களை தயாரிக்கிறார்கள் ஆனால் அந்த அளவிற்கு விளம்பரப்படுத்துகிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

'எந்திரன்' படத்தினை தயாரித்த சன் பிக்சர்ஸ் தனது சன் டி.வியின் மூலம் படத்தினை விளம்பரப்படுத்தி லாபம் பார்த்தது. சமீபத்தில் வெளிவந்த ' 7ஆம் அறிவு திரைப்படம் ' இந்த அளவிற்கு வரவேற்பை பெற்று
இருக்கிறது என்றால் காரணம் விளம்பரப்படுத்தியதால் தான்.

படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் இணையத்தின் மூலம் படத்தைப் பற்றி அவ்வப்போது சில சுவாரசியாமான தகவல்களை வெளியிட்டு வந்தார். இதன் மூலம் அவரது டிவிட்டர் இணையத்தில் பின் தொடர்கிறவர்கள் படம் பார்க்கும் முன்பே பல்வேறு சுவராசியங்களை தெரிந்து கொண்டதால் அவர்களுக்கு படம் பார்க்கும் ஆர்வம் மேலோங்கியது.

உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமாகும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தினை டிசம்பர் மாதம் முதல் விளம்பரப்படுத்த இருக்கிறார்கள். தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் ராஜேஷ், நாயகி ஹன்சிகா என அப்படத்தில் பணிபுரிந்தோர் பலர் டிவிட்டர் இணையத்தில் இருப்பதால் படத்தின் தகவல்களுக்கு பஞ்சம் இருக்காது.

தனிப்பட்ட நபர்கள் பலர் டிவிட்டர் இணையத்தில் இருக்கிறார்கள் என்றாலும், தற்போது தங்களது படத்தை விளம்பரப்படுத்துவதற்காக பலரும் பட பெயர்களில் டிவிட்டர் கணக்கை துவங்கி இருக்கிறார்கள்.

கடந்த ஒரு வாரமாக உலகம் முழுவதும் "WHY THIS KOLAVERI DI" பாடல் பிரபலமாகி வருகிறது. இதுவரை ஒரு தமிழ் பாடல் செய்யாத அனைத்து சாதனைகளையும் இந்த பாடல் செய்து விட்டது. LADY GAGA-வின் பாடலுடன் 'கொலைவெறி' கடும் போட்டி போட்டு வருகிறது.

இசையமைப்பாளர் அனுருத், பாடல் எழுதி பாடிய தனுஷ், இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ், நாயகி ஸ்ருதிஹாசன் என அனைவருமே இப்பாடலை தங்களது டிவிட்டர் இணையத்தின் மூலம் விளம்பரப்படுத்தியதும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இந்தி சினிமாவிற்கு உலகளாவிய மார்க்கெட், ஆனால் தமிழ் சினிமாவிற்கு அப்படி இல்லை என்று கூறி வருகிறார்கள் சில தமிழ்பட தயாரிப்பாளர்கள். தமிழ் படங்களை இந்தியில் ரீமேக் செய்து வரும் இக்காலகட்டத்தில் நமது படங்களை தொழில்நுட்பத்தின் உதவியோடு முறையாக விளம்பரம் செய்தால், இந்தி படங்களின் மார்கெட்டை எட்டிப் பிடிக்கும் சீக்கிரமே.

No comments:

Post a Comment

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...