Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

1 August 2012

30 வயதில்தான் மனமுதிர்ச்சி வருகிறது

மெல்பர்ன் :டீன் ஏஜ் முடிந்து 21 வயது நிரம்பினால் பெரிய ஆளாகிவிட்டதாக காலம் காலமாக கூறப்படுகிறது. அந்த வயதில் ஓட்டளிக்கலாம், தண்ணி அடிக்கலாம் என்று பல நாடுகளில் சட்டம் அனுமதி அளிக்கிறது. ஆனால், 21 வயதானாலும் இன்னும் குழந்தை பருவம்தான் என்றும் 30 வயது ஆனால்தான் மன முதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள செயின்ட் லாரன்ஸ் அறக்கட்டளை, மன முதிர்ச்சி குறித்து ஆய்வு நடத்தியது. இதில் 21 வயது நிரம்பியவர்களிடம் கருத்து
கேட்கப்பட்டது. அப்போது, 21 வயது என்பது பார்ட்டி கொண்டாடும் வயது. ஜாலியாக இருக்கும் வயது. குழந்தை பருவத்தில் இருந்து முழு மனிதனாக மாறும் கால கட்டம் அதுவல்ல. படிப்பு முடித்து, சம்பாதிக்க தொடங்கி, திருமணம் செய்து கொண்டு, சுயமாக முடிவெடுக்கும் காலம் 30 வயதுதான். அதுதான் அடல்ட் வயது என்று சரியாக சொல்ல முடியும் என்று பலர் கூறியுள்ளனர். 21 வயது வந்து விட்டாலே குழந்தை பருவம் முடிந்துவிட்டதாக கூறுவது தவறு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...