Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

23 July 2012

பில்லா 2

''எங்கேர்ந்து வர்ற?'' ''கடல்லேர்ந்து!'' நிமிர்ந்து உட்கார்ந்தது தப்பு. கிராஸ் ஃபயரில் பலியாகும் அப்பாவிப் பொதுமக்களின் கதிதான் ஆடியன்ஸுக்கும்! இது டேவிட், 'டான்’ பில்லா ஆகும் கதை. இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக வந்து இறங்குகிறார் அஜீத். (இனப் போரை இப்படி இன்ட்ரோ ஊறுகாய் ஆக்குவது காலக் கொடுமையடா!) அகதிகள் முகாமுக்குள் நடக்கும் தீப்பொறி உரசலில் வெடித்துக் கிளம்பி, 'உலகையே கட்டுப்படுத்தும்’ டான் ஆக உருமாறுகிறார். 


கோட் சூட், கூலிங் கிளாஸ், ஒரு கத்தி மற்றும் பல துப்பாக்கிகளைக்கொண்டு அதைச் சாதிப்பதுதான் 'அஜீத்’ ஸ்பெஷல். டைட்டிலில் கதை என்று மூவரின் பெயர் இடம் பெறுகிறது. மூன்று பேர் சேர்ந்து செய்த
அந்தக் கதை படத்துல எங்கே சார்? அஜீத் ரசிகர்கள் மட்டும்தான் படம் பார்க்க வருவார்கள் என்ற அதீத தன்னம்பிக்கையோ இயக்குநர் சக்ரிக்கு?


டான் தோற்றத்துக்கு அஜீத்தின் தோற்றம், லுக், நடை... எல்லாம் பக்கா. 'என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளையும்... ஒவ்வொரு நிமிஷத்தையும்...’ - என்று துப்பாக்கி முனையில் பஞ்ச் டயலாக்கோடு முதல் காட்சியிலேயே 'தலை’ காட்டும் அஜீத், அதற்குப் பின் சிலபல இடங்களில் பேசும் அத்தனையும் பஞ்ச்தான். அப்படிப் பேசாத சமயம், ஒன்று சுடுகிறார்... அல்லது கழுத்தை அறுக்கிறார் (எதிரிகளைத்தான்!). 


அஜீத் நடந்தாலே படம் ஓடிவிடும் என்ற நம்பிக்கை இனியேனும் கலையுமா? 'அப்பாஸி’ சுதன்ஷ§ பாண்டேவும் 'டிமிட்ரி’ வித்யுத் ஜம்வாலும் 'பில்லா’வுக்குச் சவாலான கம்பீரத்தோடும் கெத்தோடும் இருக்கிறார்கள். 'மாமா... மாமா’ என்று சிணுங்கிக்கொண்டே காமாசோமாவாக வந்துபோகிறார் பார்வதி. எப்போதும் நீச்சல் குளத்திலேயே பழியாகக்கிடக்கும் 'பிகினி மோகினி’ புரூனே, அதிலேயே உயிர்விடுவது... அடடடா! 


ஒரு போலீஸுடனான தகராறு சென்னை, கோவா, ரஷ்யா என்று அஜீத்தை உயர்த்திச் செல்லும் 'செயின் ரியாக்ஷன்’ எத்தனை சுவாரஸ்யமானதாக அமைந்திருக்க வேண்டும்? சர்வதேச நிழலுலக தாதாக்கள் ஒவ்வொரு சவாலையும் எவ்வளவு மதியூகத்துடன் கடக்க வேண்டியிருக்கும்? ஆனால், அஜீத் அரசாங்கப் பாதுகாப்பில் இருக்கும் ஆயுத வேனைக் கடத்தும் சாகசம்... அடப் போங்க சார்... போங்கு! 


இந்தி, தெலுங்கு, ரஷ்ய மொழிகளுக்கு எல்லாம் தப்புத் தப்பு தமிழில் சப்-டைட்டில் போடத் தெரிந்தவர்களுக்கு (படத்தின் நாளிதழ் விளம்பரங்களில்கூடத் தப்பு!), ஈழ அகதிகளை ஈழத் தமிழ் பேசவைக்கத் தெரியாதா? இத்தனைக்கும் கோவா முதல்வர்கூட சுத்தத் தமிழ் பேசுகிறார்!


 யுவன் ஷங்கரின் அதிரடிக்கும் பின்னணி இசையும் ஆர்.டி.ராஜசேகரின் அசரடிக்கும் ஒளிப்பதிவும் மட்டுமே 'டான் சினிமா கோட்டிங்’ கொடுக்கின்றன. 'நல்லவங்களைக் கண்டுபிடிக்குறதுதான் கஷ்டம்’, 'எனக்கு நண்பனா இருக்கத் தகுதி தேவையில்லை. ஆனா, எதிரியா இருக்கத் தகுதி தேவை’, 'தோத்துட்டா அவன் தீவிரவாதி, ஜெயிச்சுட்டா அவன் போராளி’ போன்ற இடங்களில் இரா.முருகன், முகமது ஜாபரின் வசனங்கள் ஷார்ப். 


அப்பாஸியோ, டிமிட்ரியோ அல்ல... லாஜிக், மேஜிக் என எந்த விதத்திலும் ஈர்க்காத கதையே 'பில்லா’வுக்கு வில்லன். பில்லா... 'தல’ ரசிகர்களுக்கு மட்டுமான குல்லா!

No comments:

Post a Comment

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...