வேலாயுதம், ஏழாம் அறிவு, மயக்கம் என்ன ஆகிய மூன்று படங்கள் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகிவிட்டது. தற்போது இந்த தீபாவளி பந்தயத்தில் சிம்பு நடிப்பில் வெளிவர இருக்கும் ஒஸ்தி படமும் இணைந்து உள்ளது.
சிம்பு, ரிச்சா, சோனு மற்றும் பலர் நடித்து இருக்கும்
படம் ஒஸ்தி. இந்தியில் வெளியான டபாங் படத்தின் ரீமேக்காகும். தரணி இயக்க தமன் இசையமைத்து இருக்கிறார்.
முதல் முறையாக சிம்பு போலீஸ் வேடத்தில்
நடித்து இருக்கிறார். படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்து படமாக்கப்பட்டு விட்டன. தற்போது சென்னையில் பாடல் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.
இந்நிலையில் இப்படம் குறித்து சிம்பு தனது ஃபேஸ்புக் இணையத்தில் கூறியிருப்பது " ஒஸ்தி படத்தின் பாடல்கள் அனைத்தும் முடிந்து விட்டது. இப்படத்தில் ஒரு பாடலை நான் பாடி இருக்கிறேன். நான் பாடிய பாடலில் இருந்து சில வரிகள். பொண்டாட்டி அடி நீ தானே என் சுவீட்டி, WILL LOVE U TILL UR A பாட்டி, தேவையில்லை வப்பாட்டி" என்று கூறியிருக்கிறார்.
நல்ல தகவல் தான்.ஒஸ்தி படம் தான் எப்படி இருக்குன்னு தெரியல
ReplyDeletethangalin vimarsanathuku mikka nanri mr.vairai sathish
ReplyDelete