ஷாருக்கானுடன் இணைந்து 'ரா.ஒன்' படத்தில் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.
இத்தகவலை ரஜினி குடும்பத்தினரும் மறுக்கவில்லை. இதனால் ரஜினி நடிப்பார் என்றும் ஒருபுறமும், அவருடைய உடல்நிலை இன்னும் முழுமையாக குணமடையவில்லை
ஆகையால் நடிக்க மாட்டார் என்றும் மாறி மாறி தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், ரஜினி நேற்று ( அக்டோபர் 2 ) அப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
முதலில் ரஜினி பங்கேற்கும் காட்சியின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பின்னர் படப்பிடிப்பை மும்பையில் இருக்கும் ஸ்டூடியோவிற்கு மாற்றி விட்டார்கள். ரஜினியின் உடல்நிலையை மனதில் கொண்டு, படப்பிடிப்பிற்கான எல்லா ஏற்பாடுகளையும் தயாராக செய்து வைத்திருந்தார்களாம். ரஜினி படப்பிடிப்பு தளத்திற்கு போனதும் மூன்றே மணி நேரத்தில் அவரது காட்சிகளை படப்பிடிப்பு செய்து முடித்தார்களாம். படப்பிடிப்பு முடிந்ததும் ரஜினி ஷாருக்கானை வாழ்த்தியிருக்கிறார்.
ஷாருக்கான் தனது டிவிட்டர் இணையத்தில் " ரா.ஒன் படபிடிப்பு இன்றுடன் முடிந்தது. ரஜினி எங்களை ஆசிர்வதித்தார். அவரால் தான் இப்படம் முழுமையடைந்தது." என்று உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment