தனுஷ், ரிச்சா நடிக்க செல்வராகவன் இயக்கி வரும் படம் 'மயக்கம் என்ன?' இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு நடைபெற இருக்கிறது.
செல்வராகவன் 'மயக்கம் என்ன?' படம் குறித்து " நான் இப்போது இயக்கி வரும் படம் 'மயக்கம் என்ன?'. தனுஷ், ரிச்சா நடிக்கிறார்கள். இது அடுத்த தலைமுறையைப் பற்றி, அவர்களின் பிரச்னைகளைப் பற்றி பேசுகிற படம்.
'இரண்டாம் உலகம்' என்பது தனிக்கதை. ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் படம். அதைப்பற்றி இப்போது பேசுவதற்கு ஒன்றுமில்லை. காரணம் டிசம்பர் முதல்தான் அதில் இறங்க வேண்டும். இப்போது என் கவனமெல்லாம் 'மயக்கம் என்ன?' படம் மீது தான்.
'மயக்கம் என்ன?' கதையில் வரும் கதாபாத்திரத்திற்கு தனுஷ் சரியாக இருந்ததால் மட்டுமே அவரை இப்படத்தில் நடிக்க வைத்து இருக்கிறேன். இது இதுவரை யாரும் பார்த்திராத கதை என்று சொல்ல மாட்டேன். ஒவ்வொருவரும் இது நம்ம வீட்டுக் கதை என்று எண்ணுகிற அளவுக்கு எல்லாருக்கும் நெருக்கமான கதை.
கதை மொத்தமும் நாயகன் தனுஷ், நாயகி ரிச்சா இருவரை மையம் கொண்டு பயணிக்கிறது. இது காதல் கதையல்ல.. காதலும் உள்ள கதை.
ரசிகர்களை ஏ, பி, சி என பிரிப்பதில் உடன்பாடில்லை. 'மயக்கம் என்ன?' எல்லாருக்குமான படம். படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. கேரளா, சென்னை, கோவை தவிர தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இப்படம் நிச்சயமாக புதிய அலை படமாக இருக்கும் " என்று கூறினார்.

please keep follower widget...
ReplyDelete