திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பல்வேறு புது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பெரிய நடிகர்களின் படங்கள் இனிமேல் பண்டிகை காலங்களில் மட்டுமே வெளியிடப்படும். பொங்கல், தமிழ் புத்தாண்டு, மே தினம், சுதந்திர தினம், தீபாவளி ஆகிய நாட்களில் மட்டுமே வெளியிட
வேண்டும். மீதி நாட்களில் சிறு படங்கள் வெளியாகும் என்று அறிவித்தது. ஆகையால் சிறுபடங்களின் தயாரிப்பாளர்கள் பலன் அடைவார்கள் என்று அறிவித்தது. தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அறிவிப்பால் பல்வேறு சிறு தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
பிப்ரவரி 3ம் தேதி தனுஷ் நடித்த ' 3 ' , 17ம் தேதி கார்த்தி நடித்த ' சகுனி ' வெளியாகும் என்று ஏற்கனவே முடிவானது. ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவால் இப்படங்கள் எப்போது வெளியாகும் என்பதில் குழப்பம் நீடித்தது.
தற்போது ' 3 ', ' சகுனி ' ஆகிய படத் தயாரிப்பாளர்கள் ஏப்ரல் 13ம் தேதிக்கு தங்களது வெளியீட்டை தள்ளிவைத்து விட்டன. அஜீத் நடிப்பில் ஏப்ரல் 13ம் தேதி வெளியீடு என்று தீர்மானிக்கப்பட்ட ' பில்லா 2 ' தங்களது வெளியீட்டு தேதியை தள்ளிப் போட்டு, மே 1ம் தேதி வெளியிட தீர்மானித்து இருக்கிறது.
மே 1ம் தேதி அஜீத்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment