Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

15 October 2011

அஜித், விஜயை விட எனக்கு அதிக ரசிகர்கள்?

தமிழ் திரையுலகில் சமீப காலத்தில் 200 நாட்களை கடந்தும் ஒடிக்கொண்டிருக்கும் ஒரே படம் 'லத்திகா'. அமைந்தகரை லட்சுமி தியேட்டரில் இப்போதும் காலை காட்சியில் கூட்டம் அலைமோதி (அப்படித்தான் சொல்கிறார்கள்) வருகிறதாம்.

'லத்திகா' படத்தின் தயாரிப்பு, கதை, திரைக்கதை, இயக்கம் அனைத்துமே பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் தற்போது தனது அடுத்த பட வேலைகளில் பிஸியாக பணியாற்றி வருகிறார்.

தனது அடுத்த பட நாயகியாக நித்யா மேனனை ஒப்பந்தம் செய்ய அணுகியதாகவும் அதற்கு அவர் நான் சீனியர் நடிகர்களுடன் ஜோடி சேருவதில்லை
என்று தெரிவித்தாகவும் தகவல்கள் வெளியாகின.

இத்தகவலை பவர் ஸ்டார் சீனிவாசன் மறுத்துள்ளார். அவர் " எனது அடுத்த படத்திற்கான வேலைகளில் துரிதமாக செயல்பட்டு வருகிறேன். அக்கதைக்கு ஒரு மலையாள நாயகியை ஒப்பந்தம் செய்யலாமா என்று ஆலோசித்து வருகிறேன். ஆனால் நித்யா மேனன் யார் என்று எனக்கு தெரியாது " என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில், 'லத்திகா'வின் சாதனையை ( 200 நாட்கள் ) நெருங்கிக் கொண்டிருக்கிறது 'கோ' ( 175 நாட்கள்).
'லத்திகா' படத்தினை அடுத்து பவர் ஸ்டார் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'ஆனந்த தொல்லை'. இப்படத்தினை 365 நாட்கள் ஓட்ட அவரது ரசிகர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்கிறார் பவர் ஸ்டார்.

சாம் ஆண்டர்சன், டி.ராஜேந்தர் ஆகிய வீடியோ பதிவுகளை அடுத்து பவர் ஸ்டார் நடித்த வீடியோ பதிவுகளை தான் YOUTUBEல் தற்போது அதிகம் பேர் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

போற போக்க பாத்தா அஜித், விஜயை விட அதிக ரசிகர்களை பெற்று விடுவார் போல தான் தெரிகிறது.....

தயவு செய்து கமெண்ட் போடுங்கப்பா

5 comments:

  1. Lathikaa padathai 5 murai paarthuvittaen. Innum pathu thadava paarpaen. Romba nalla padam.

    ReplyDelete
  2. lathika movie is the best movie in this 75 year
    tamil movie industries... great power star
    u welcome .

    ReplyDelete
  3. singam Power STar Lathika Runnig SussessFUlly 1000 DAys POwer Star

    ReplyDelete

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...