விமல், நிஷா அகர்வால் ( காஜல் அகர்வாலின் தங்கை) நடித்துவரும் படம் 'இஷ்டம்'. பிரேம் நிஸார் இயக்க பாலாஜி ரியல் மீடியா தயாரித்து வருகிறது. இப்படத்தின் காமெடியனாக சந்தானம் நடித்து
வருகிறார்.
இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு திரிசூலம் மலைப்பகுதியில் நடந்தது. விமல் - நிஷா அகர்வால் சம்பந்தப்பட்ட நெருக்கமான காதல் காட்சிகள் படமாக்கப்பட்டது.
காருக்குள் இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் காட்சி படமாக்கப்பட்டது. முதலில் விமல் நிஷாவின் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கத் தயக்கம் காட்ட, இயக்குனர் அவரை ஒப்புக் கொள்ள வைக்க முயன்றாராம்.
இருந்தாலும் விமல் தயங்க, நிஷா அகர்வால் விமலிடம் "எதற்கு பயப்படறே! தயக்கம் காட்ட வேண்டிய நானே ரெடி என்கிறேன்.. தயங்காமல் நடி! " என்றார். அதன் பிறகு விமல் ஒப்புக் கொண்டாராம்.
காருக்குள் இருவரும் முத்தம் கொடுக்கும் காட்சி படமாகிக் கொண்டிருந்த போது, சரிவிலிருந்த கார் திடீரென்று 500 அடி பள்ளத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. உடனே படப்பிடிப்புக் குழுவினர் பதறிப்போய் ஒடிச்சென்று இருந்த காரை தடுத்து நிறுத்தி விமல் - நிஷா அகர்வால் இருவரையும் காப்பாற்றி இருக்கிறார்கள்.
அட, ஒரு லிப் கிஸ் சீன் எடுக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு !
No comments:
Post a Comment