சென்னை: நடிகை சோனா கொடுத்த புகாரில் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் எஸ்.பி.பி.சரண் மீது போலீசார் வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.
முதல்கட்ட போலீஸ் விசாரணைக்குப்பிறகு
அவர் கைது செய்யப்படுவார் எனத்
தெரிகிறது.
பாலியல் பலாத்காரம்
நடிகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண் மீது பிரபல நடிகை சோனா பாலியல் குற்றம் சாட்டி நேற்று முன்தினம் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் பத்திரிகையாளர்களைக் கூட்டி கதறி அழுதபடி தனக்கு நேர்ந்ததைச் சொன்னார் சோனா.
பலர் முன்னிலையில் தன் மீது பாய்ந்த சரண், ஆடைகளைக் கலைந்ததாகவும் அவர் கூறினார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண் என்பது குறிப்பிடத்தக்கது.
சோனாவின் இந்த புகார் மீது பாண்டிபஜார் போலீசார் நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்தனர்.
எஸ்.பி.சரண் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு உள்பட 4 சட்டப்பிரிவுகளின்கீழ் போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'முதல் கட்டமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக எஸ்.பி.பி.சரணிடம் விசாரணை நடத்தப்படும். உடனிருந்தவர்களையும் விசாரிப்போம். பின்னர் கைது செய்வது பற்றி முடிவு செய்யப்படும்,' என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் எஸ்.பி.பி.சரண் நேற்று போலீஸ் கமிஷனரை சந்தித்து தன் மீது கூறப்பட்டுள்ள புகார் தவறான புகார் என்பதை சுட்டிக்காட்டி விளக்க மனு ஒன்று கொடுக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், கமிஷனரை சந்திக்க அவர் வரவில்லை. அவர் கோர்ட்டில் முன்ஜாமீன் வாங்குவாரா? அல்லது விசாரணைக்கு பாண்டிபஜார் போலீசில் அவர் ஆஜராவாரா? என்பதும் தெரியவில்லை.
No comments:
Post a Comment