ரஜினியின் வாழ்க்கை வரலாறு குறித்த இந்தி படம் ஒன்றை தயாரிப்பாளர் அதுல் அக்னிஹோத்ரி தயாரிப்பதாகவும்,
அதில் ரஜினிகாந்த் வேடத்தில் சல்மான்கான் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இதற்கு ரசிகர்கள் மற்றும் சக நடிகர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினி ஒரு சகாப்தம். அவரைப் போல வேறு யார் நடித்தாலும் ஏற்க முடியாது என்று இந்தி சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்தினர்.
ரஜினியின் குடும்பத்தினர் இந்தப் படத்துக்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறிவிட்டனர். "இப்படியொரு படம் எடுப்பதை நாங்கள் யாரும் விரும்பவில்லை. இது குறித்து எங்களிடம் இதுவரை யாரும் பேசவுமில்லை." என்று ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முக நரம்பு அறுவைச் சிகிச்சை முடிந்து லண்டனில் நடைபெற்று வரும் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சல்மான்கான். அப்போது நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரஜினி வாழ்க்கை வரலாறு படம் குறித்து கேட்கப்பட்டது.
அக்கேள்விக்கு சல்மான்கான் கூறியிருப்பது " ரஜினியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நான் நடிக்கவில்லை. ரசிகர்கள் அதை எந்த அளவுக்கு எடுத்து கொள்வார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. நான் ரஜினியின் தீவிர ரசிகன். நானே ரஜினியாக மாற வேண்டும் என ஒரு காலத்திலும் நினைத்தது இல்லை. இந்திய சினிமாவில் ஒரு ரஜினிதான்... ஒரு சல்மான்தான்! " என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment