Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

23 November 2011

'கொலவெறி' பாடலுக்கு அமிதாப் வாழ்த்து!

தனுஷ் எழுதி பாடியுள்ள ' WHY THIS KOLAVERI DI ' பாடல் தற்போது தமிழக இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் தற்போது வலைதளங்கள் மூலம் மிகப் பிரபலமாக உள்ளது.

'WHY THIS KOLAVERI DI ' பாடல் டிவிட்டர் இணையத்தின் TRENDINGல் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கிறது.

YOUTUBE இணையத்தின் TRENDING-லும் இப்பாடல்
தற்போது முதல் இடத்தில் இருந்து வருகிறது. இதுவரை YOUTUBEல் 17,90,827 பார்த்து இருக்கிறார்கள். ஒரு தமிழ் பாடலுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு இந்த பாடலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பால், இந்தி சேனல்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் ' KOLAVERI BECOMES A VIRAL IN INDIA ' என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்தி எஃப்.எம் களும் தற்போது இந்த பாடலை ஒளிபரப்பி வருகிறார்கள். இது வரை எந்த ஒரு பாடலும் செய்யாத சாதனையை இந்த பாடல் அடங்கிய YOUTUBE வீடியோ செய்துள்ளது.

YOUTUBEல் "POPULAR VIDEOS AROUND THE WEB" ல் ஒரு தமிழ் பாடல் முதன் முறையாக 10வது இடத்தை பிடித்துள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த ஒரு பாடல் ஒவ்வொரு சாதனை செய்து புகழ்ச்சியில் வளர்ந்து வருவதால் சந்தோஷத்தில் திக்குமுக்காடி வருகிறது 3 படக்குழு.

இப்பாடலை கேட்ட இந்தி முன்னணி நடிகரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான அமிதாப் பச்சன் " கொலவெறி பாடலை பற்றிய பேச்சாக இருந்ததால் அப்பாடலை கேட்டேன். அருமையாக இருந்தது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷிற்கு எனது வாழ்த்துக்கள் " என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி நடிகராக இருக்கும் அமிதாப்பச்சனின் இந்த வாழ்த்து செய்திக்கு படக்குழு தனது நன்றியை தெரிவித்டுள்ளது. இப்படத்தின் அறிமுக இசையமப்பாளர் அனிருத்தை தங்கள் படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய பல இயக்குனர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Facebook Pages:

நீங்கள் விஜய் ரசிகரா ?
Facebook  - இல் விஜயை பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள நாங்கள் ஒரு புதிய முயற்சியை மேட்கொண்டுள்ளோம். விஜய் ரசிகர்கள் இந்த page ஐ like செய்து விஜய் பற்றிய விவரங்களை விரைவில் தெரிந்து கொள்ளலாம் என அவரது ரசிகர்களுக்கு நாங்கள் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
 Click Here --- One and Only விஜய்

விரைவில் அஜித் ரசிகர்களுக்கான பக்கம்! 

No comments:

Post a Comment

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...