சினிமா கிசு கிசு!
- ஒளிமயமான நடிகர் தயாரிக்கும் படங்களில் தவறாமல் இடம்பெறும் மூத்த நகைச்சுவை எஸ்.எம்.எஸ் நடிகர் ஒருவர், ''அவரோட எல்லா படத்துலேயும் நடிச்சா மட்டும் போதுமா? சம்பளம்னுஒண்ணு இருக்கே... அதைத் தர வேணாமா?'' என்று சக நடிகர்களிடம் வேதனையில் புலம்புகிறாராம்!
- கிராமத்து இயக்குநர், தலைவர் பதவியை தூக்கி எறிய நினைத்தாராம். ''உங்களுக்காக அலைஞ்ச எங்க உழைப்பை மதிக்க மாட்டீங்களா?'' என்று ஆதரவாளர்களிடம் இருந்து கோரஸாக குரல் கேட்கவே, கண் கலங்கி முடிவை வாபஸ் பெற்றாராம்!
- காக்கியின் உதவியை நாடியுள்ள செல்வ நடி¬கக்கு, அவர் கேட்காமலே கதர்கள் ஆதரவை வாரி வழங்குகிறார்களாம். கடுப்பில் இருக்கின்றனர் கறுப்புச் சட்டைகள்!
- ஒல்லிக் குச்சிப் பாடகி நாள் தவறாமல் நட்சத்திர ஹோட்டலில் குத்தாட்டம் போடுகிறாராம். சில நாட்களில், விடிந்த பிறகே வீட்டுக்கு வருகிறாராம். கண் சிவக்கிறாராம் கணவர். விரைவிலேயே விவகாரம் வெடிக்கலாம்!
- விரைவில் கண்ணாலம் முடிக்க இருக்கும் நடிகையின் செல்போனை வாங்கிய சார், அதில் இருந்த அத்தனை நடிகர்களின் எண்களையும் அழித்துவிட்டாராம். காதலரின் செயலைக் கண்டு கலக்கத்தில் இருக்குது பொண்ணு!
No comments:
Post a Comment