ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்ச்சனா கவி நடிக்க, வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'அரவான்'. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்து இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 'அரவான்' இசையினை வெளியிட இயக்குனர் மணிரத்னம் பெற்றுக்கொண்டார்.
ஏ.ஆர்.ரஹ்மான் : " தமிழ் ரசிகர்கள் மத்தியில் சினிமா பற்றிய ஞானம் வளர்ந்து இருக்கிறது. அவர்களின் ரசனை உயர்ந்து
இருக்கிறது. ஒரு படத்தின் முன்னோட்டத்தை பார்த்து, அது எப்படிப்பட்ட படம் என்பதை கணித்து விடுகிறார்கள். நான், தமிழ் படங்களை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கிறேன். இந்த பட காட்சிகளை பார்க்கும்போது, எனக்கும் அதிக தமிழ் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. இசையமைப்பாளர் கார்த்திக்கின் இசையில் நிறைய காதல் இருக்கிறது. வாழ்த்துக்கள் "
இயக்குனர் பாலசந்தர் : " இயக்குனர் மணிரத்னம் எப்படி ஏ.ஆர்.ரஹ்மானை கண்டுபிடித்தாரோ அதைப் போலவே வசந்தபாலன் கார்த்திக்கை கண்டுபிடித்து இருக்கிறார். "
விழாவில் இயக்குனர்கள் மணிரத்னம், சேரன், வெற்றிமாறன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பட அதிபர்கள் எஸ்.தாணு, கேயார், டி.ஜி. தியாகராஜன், கே.முரளிதரன், அன்பாலயா கே.பிரபாகரன், தனஞ்செயன், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
பட அதிபர் டி.சிவா வரவேற்று பேசினார். இயக்குனர் வசந்தபாலன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment