'மங்காத்தா' படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த படம் என்ன நாயகன் யார் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மங்காத்தா படத்தினை முதலில் வெளியிட முடிவு செய்த 'ஸ்டூடியோ க்ரீன்' நிறுவனம் தற்போது வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தினை தயாரிக்க முன்வந்துள்ளது.
'ஸ்டூடியோ க்ரீன்' நிறுவனம் இதுவரை 'பருத்திவீரன்', 'நான் மகான் அல்ல', 'சிங்கம்', 'சிறுத்தை' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது. சூர்யா குடும்பத்தின் நெருங்கிய உறவினரான ஞானவேல்ராஜாவின் நிறுவனம்
இது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் குறித்து ஞானவேல்ராஜா " எங்கள் நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்குவது வெங்கட்பிரபு தான். ஆனால் இதில் நாயகன் , நாயகி யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் படத்திற்கான நாயகன், நாயகியோடு படத்தை பற்றிய தகவல்களை வெளியிடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
'ஸ்டூடியோ க்ரீன்' நிறுவனத்தின் படங்களில் சூர்யா அல்லது கார்த்தி தான் நாயகனாக நடித்து வருகிறார்கள். ஆகையால் வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் சூர்யா நடிப்பார் என்று தகவல்கள் பரவ ஆரம்பித்துள்ளன.
No comments:
Post a Comment