ரஜினி, தீபிகா படுகோன் நடிப்பில் பூஜை போடப்பட்ட படம் 'ராணா'. கே.எஸ்.ரவிக்குமார் இயக்க EROS நிறுவனம் தயாரிக்க முன்வந்தது.
பூஜை அன்று ரஜினிக்கு ஏற்பட்ட உடல்நிலை கோளாறால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சென்னை மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து தற்போது முழு ஒய்வு எடுத்து வருகிறார் ரஜினி.
'ராணா' படப்பிடிப்பு தொடங்க தற்போது வாய்ப்பு ஏதுமில்லை என்று தகவல்கள் வெளிவருவதும் அதனை தயாரிப்பாளர் தரப்பு மறுத்து வருவதும் வாரம் ஒருமுறை தவறாமல் நடைபெற்று
வருகிறது.
இத்தகவல்கள் குறித்து ராணா படக்குழுவிடம் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் :
'ராணா' படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட தீபிகா படுகோன், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, வில்லன் நடிகர் சோனு தூத் உள்ளிட்ட அனைவரிடம் "உங்களுக்கு வேறு படங்கள் வந்தால் ஒத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார்களாம்.
இவ்வாறு கூறியதால் ரத்னவேலு கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் ஒரு படம் இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். தீபிகா படுகோனும் அடுத்து அடுத்து இந்திப் பட வாய்ப்புகளை ஒப்புக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறார்.
ரஜினி முழு உடல் தகுதி பெற்று வரும் நேரத்தில் படப்பிடிப்பு துவங்கப்படலாம் என்பதால், தயாரிப்பு நிறுவனத்தினர் கொடுத்த அட்வான்ஸை யாரிடமிருந்தும் திருப்பி பெறவில்லை.
படப்பிடிப்பு துவங்க இன்னும் ஒரு வருடம் கூட ஆனாலும் ஆச்சர்யத்திற்கில்லை என்ற பேச்சு கோலிவுட்டில் நிலவுகிறது.

No comments:
Post a Comment