Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

30 January 2012

ஆஹா ரஜினி ! : நடுரோட்டில் ரசிகர்

ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியின் ஆண்டுவிழா தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்று. இவ்விழாவில் ரஜினி பெயரில் சிறந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவுக்கு வந்திருந்த
ரஜினி நிகழ்ச்சி முடிந்ததும் கருப்பு கண்ணாடி ஏற்றப்பட்ட ஒரு காரில் அரங்கில் இருந்து வெளியேறினார். உள்ளே இருப்பது ரஜினிதான் என்பதை அறியாத பலர், அந்த காருக்கு வழிவிடாமல் வழக்கம் போலவே மெல்ல நடை போட்டார்கள். கார் எப்படியோ காமராஜர் அரங்கத்தை விட்டு மெயின் ரோட்டை பிடித்தது.

அம்முனையில் நின்றிருந்த இரண்டு பத்திரிகையாளர்களை கவனித்த ரஜினி, தனது கார் கண்ணாடியை இறக்கி ஒரு புன்னகைத்து விட்டு, கை கூப்பி வணங்கி விட்டு கிளம்பினார். இந்த நேரத்தில் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் ரஜினியை கவனித்து விட்டு ரஜினி சென்ற காரை விரட்ட ஆரம்பித்தார்.

ரஜினியின் கார் சிக்னலில் நின்றது. அவசரத்திலும், ஆர்வத்திலும் தனது பைக்கை அப்படியே நடு ரோட்டில் விட்டு விட்டு ரஜினி இருந்த காரை நோக்கி ஒடினார் இளைஞர்.

கண்ணாடியை இறக்கிய ரஜினி அந்த இளைஞரை பார்த்து, "ஏம்ப்பா.. இப்படியா வண்டியை விட்டு ஓடி வருவே, தடுக்கி விழுந்தா என்னாகும்? பைக்கை இவ்ளோ வேகமா ஓட்டறது ரொம்ப தப்பு " என்று கூறிவிட்டு கார் கண்ணாடியை ஏற்றி விட்டார்.

அவர் கண்ணாடியை ஏற்றவும் சிக்னல் விழ சரியாக இருந்தது.

ரஜினியின் கார் செல்ல, ரஜினி தன்னிடம் பேசியதற்காக சந்தோஷத்தில் அந்த ரசிகர் சிரித்தபடி தன் வண்டியை எடுத்துக் கொண்டு போனார்.

No comments:

Post a Comment

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...