"காதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக்" -மனைவியைக் கொன்ற வாலிபரி...ன் அதிர்ச்சி கடிதம்!
தன் காதல் மனைவி கலாச்சார சீரழிவில் சிக்கி தனக்குத் துரோகம் செய்த விவரங்களை, மனைவியைக் கொன்ற வாலிபர் மகேஷ்குமார் தற்கொலை செய்யும் முன்னர் காவல்துறைக்கு விவரமாக எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவிலுள்ள மூணாறு விடுதி ஒன்றில் சமீபத்தில் ஒரு பெண் கொலைசெய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அவ்விடுதியில் அறை எடுத்திருந்த அவளுடைய கணவனே கொலை செய்து விட்டுத் தலைமறைவானதாக காவல்துறை விசாரணையில் தெரிய
வந்தது.
வந்தது.
இதனைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் மகேஷ் குமாரைக் காவல்துறையினர் தேடி வந்த நிலையில், மகேஷ் குமார் நேற்று காலை அவருடைய சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பட்டிமணியக்காரன் பாளையத்தில் தன் வீட்டின் அருகிலுள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்னர் மகேஷ்குமார் காவல்துறையினருக்குத் தன் மனைவியினைக் கொலை செய்வதற்கான காரணத்தை விவரித்து உருக்கமான கடிதம் ஒன்று எழுதி உள்ளார். முழுமையாக ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யப்பட்டிருந்த அந்தக் கடிதத்தைக் காவல்துறையினர் வெளியிட்ட்டுள்ளனர்.
அக்கடிதத்தில் மகேஷ்குமார் எழுதியுள்ள விவரம் வருமாறு:
"மதிப்புக்குரிய காவல்துறையினருக்கு,
எனக்குத் தெரியும், என்னை நீங்கள்குறிவைத்து தேடி வருகிறீர்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆம் நான்தான் இதைச் செய்தேன். வேறு நான் என்ன செய்ய?...
படித்த பெண்கள் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் முழுமையாக வெளிநாட்டு கலாசாரத்துக்குத் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். வெளிநாட்டுக்காக உழைக்கும் அவர்கள், எதையும் தவறாக நினைப்பதுஇல்லை. எல்லாமே வெறும் இன்பத்துக்கானதுதான் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு நெருக்கமான, உண்மையான, உணர்வுப்பூர்வமான உறவுகள் தேவையில்லை. அவர்களுக்குக் கலாச்சாரம், கணவர், சமூகம், குடும்பம் பற்றிய கவலையே கிடையாது.
படிப்பும், பணமும், கொஞ்சம் அழகும் இருந்தால் போதும், எதுவும்அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. அப்படி அவர்கள் செல்லும் பாதையில் ஏதேனும் பிரச்சினைகள் வந்து விட்டால் `சாரி' என்கிற ஒற்றை வரியில் பிரச்சினைக்குரிய நபரைச் சரி செய்துகொள்கிறார்கள். அப்படியும் அவர்கள் சமாதானம் அடையவில்லை என்றால், கவலைப்படாமல் ஆட்களை மாற்றிக்கொள்கிறார்கள்.
சூழ்நிலைக்கு ஏற்ப நடிப்பது எப்படி என்பது அவர்களுக்குத் தெரியும்
எல்லா வாக்குறுதிகளையும் மறந்துவிட்டு காதல், நிகழ்வுகள், மறக்க முடியாத நினைவுகள், கவனிப்பு இவை எதுவுமே அவர்களின் மனதில் நிலைப்பதில்லை. எதையும் மிக சுலபமாக மறந்து விட்டு புது வாழ்வை எளிதாக, குறுகிய காலத்திலேயே தொடங்கி விடுவார்கள். அவர்களால் முடியும்.அவள் செய்தாள்...
சரி... மீண்டும் அவளை நான் அடைந்த பிறகு, அவளை எச்சரித்தேன். அழுது, கெஞ்சி அவளிடம் வேண்டிப்பார்த்தேன். எந்தப் பிரயோசனமும் இல்லை. நான் அவளுக்கு2 முறை வாய்ப்பு கொடுத்தேன். நான் அவளை மன்னித்து என்னோடு வாழ மீண்டும் அனுமதித்தேன். அவளுடைய மாமா மற்றும் வீட்டு உரிமையாளருக்கு இது தெரியும். (ஏனென்றால் அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் அவளுக்காக மட்டுமே வாழ்ந்தேன்).
ஆனால் அவள் மீண்டும் என்னுடைய மன்னிப்பைத் தவறாக பயன்படுத்தத் தொடங்கினாள். ஆகவே நான் விவாகரத்து பெற விரும்பி மனு செய்தேன். அவள் அதைப் புரிந்து கொண்டுத் தெளிவான மனநிலையில் என்னோடு திரும்பி வருவாள் என்று நினைத்தேன்.
எப்படி இருந்தாலும் இந்தக் காதல் கதையின் கடைசி கட்டத்துக்கு வந்தாகி விட்டது. என்னுடைய வாழ்க்கை பயணம் கடைசி கட்டத்துக்குப் பயணித்தது அது ஏற்கனவே முடிந்து விட்டது. எப்போது அவள் வழி தவறினாளோ அப்போதே வாழ்க்கை முடிந்து விட்டது).
தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவளுக்கு எந்தக் குறையும் வைக்காமல் சந்தோஷமாக இருக்க விரும்பினேன். அந்தக் காரணத்தால்தான் மீண்டும் ஒருமுறை தேனிலவுக்காக அழைத்துச்சென்றேன். நான் அனைத்து வகையிலும் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தேன்.
என்னுடைய திட்டம் நான் தற்கொலை செய்து கொள்வது மட்டும்தான். அவள்அவளுடைய வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து அனுபவிக்கட்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால்...
இறுதியாக நான் அவளிடம் பிச்சைக்காரனைப் போல மண்டியிட்டு வேண்டினேன். அவள் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
ஒரு தாய் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கும்போது, அவளுடைய குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொள்வது போல... நானும் என் குழந்தையாக கருதிய அவளைக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்ய முடிவு செய்தேன்.
ஆனால், அதையும் ஒருநாள் தள்ளிப்போட்டேன். ஏனென்றால் அவளுடன் தொடர்பு வைத்து இருந்த 3 வாலிபர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டேன். முயற்சியும் செய்தேன்.
ஷாம்(ஷமிலா)வுக்காக நான் எதையும் செய்ய துணிந்தேன். நான் எடுத்த இந்த முடிவுக்காக கடவுளாலோ, அரசாங்கத்தாலோ பழிக்குப்பழி தீர்க்கப்படும்.
என் அருமை ஷாம்!
இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அல்லது நான் தவறான தகவல்கள் தருகிறேன் என்றால், தயவுசெய்து கடந்த 6 மாதங்களாக ஷமிலாவின் மொபைல் பில்லைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். திருமணமான ஒரு பெண், அதிகாலை 3 மணி வரை எப்படி பேசியிருக்கிறாள், 'சாட்டிங்' செய்து இருக்கிறாள் என்று...
தயை கூர்ந்து சமூகத்துக்குத் தொல்லை கொடுக்கும் இது போன்றவர்களையும் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். (இந்திய சட்டப்படி யார் கொலை செய்ய காரணமாக இருக்கிறார்களோ அவர்களையும் கைது செய்ய வேண்டும்...)
எங்கள் வாழ்வில் நுழைந்த முக்கிய குற்றவாளி தினமும் காலை 9.10 மணி முதல் நான் திரும்பி வரும் வரை அவன்தான் அவளுடன் வசித்து வந்தான்.
2-வது ஒருவன், அவனுடன் கடந்த ஜுலை 20 மற்றும் 21-ந் தேதிகளில் தங்கி இருந்தாள். அவனுடன் ஒரே அறையில் தங்கி இருக்கும் மேலும் ஒருவனும் அவளைப் பங்கிட்டுகொண்டார்கள்.
4-வதாக பேஸ் புக் இணையதளம் மூலம் அறிமுகமானவன், எந்த நேரம் என்று பார்க்காமல் மெசேஜ் அனுப்புவது, பேசுவது என்று தொடர்ந்து வந்தான்.குறிப்பாக அதிக அளவில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்தான்.
இதுபோல் பேஸ் புக் இணையதளம் மூலம்அறிமுகமான மற்றொருவனும் நள்ளிரவு நேரங்களில் தொடர்ந்து பேசுவதும், மெசேஜ் அனுப்புவதுமாக இருந்தான்.
6-வது முக்கிய நபர் மதுரையைச் சேர்ந்தவன். இவன்தான் மனதை மயக்கிஅவளை, அவனுடைய மற்ற மீடியா நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ள அறிமுகப்படுத்திவைத்தான்.
கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதிபகல் 12.45 மணிக்கு 3 பேர் அவளை ஒரு காரில் அழைத்துச்சென்று ஓட்டலில் 6 மணி நேரத்துக்கும் மேலாக தங்கி இருந்தார்கள்.
(அவர்கள் காரில் அழைத்துச்சென்ற நேரம் நான் குறுக்கே புகுந்து காரைத் தடுத்தேன். அவர்கள் 3 பேரும் என்னைப் பிடித்து வீதியில் தள்ளினார்கள். அப்போது ஷமிலா "என்னிடம் நீ போ, என்னுடன் வராதே" என்று விரட்டினாள். அவள் சென்ற 6 மணி நேரமும், அவளுடைய மொபைல் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது).
டி.வி. நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடிகராக இருப்பவன் தினமும் இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரைபோனில் பேசுவதும், மெசேஜ் அனுப்புவதுமாக இருப்பான். இவனுடைய தொடர்பு கடந்த 30-ந் தேதிவரை ஷமிலாவுடன் இருந்தது. ஷமிலா என்னிடம் திருந்தி விட்டதாக கூறினாள். அவளுடைய வாழ்க்கையையும், என்னுடைய ஆழமான நம்பிக்கையையும் புரிந்துகொண்டதாக கூறினாள். நான் குறிப்பிட்ட இந்த நபர்களிடம் பேசமாட்டேன்... இனிமேல் இதுபோன்ற செயலைச் செய்ய மாட்டேன் என்று என்னிடம் கூறி இருந்தாள். அவை எல்லாம் நாடகம் என்பதும், என்னை முட்டாளாக்க அவள் நடத்திய நாடகம் என்பதையும் செப்டம்பர் 18-ந் தேதி அவள் அவர்களுடன் தங்கியபோது புரிந்துகொண்டேன்.
8-வதாக ஒருவன். இவன் அந்த டி.வி. நடிகரின் நண்பன். இவனும் அந்த செப்டம்பர் 18-ந் தேதி பார்ட்டியில் அவளைப் பகிர்ந்து கொண்டவன். இவனும் ஷமிலாவை மிகவும்கவர்ந்து, நள்ளிரவில் போன் பேசியும், மெசேஜ் அனுப்பியும் வந்தான்.
9-வதாக ஒருவன் ஒரு பகுதிநேர வேலை தொடர்பாக அவளை அணுகி, அந்த நாள் முதல் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி குறுகிய காலத்தில் நட்பை வளர்த்துக்கொண்டவன். இதுபோலவே 10-வதாக ஒருவனும் ஷமிலாவுடன் தொடர்பு வைத்திருந்தான். இவர்கள் தவிர ஏராளமான எண்களில் இருந்து நள்ளிரவு மெசேஜ் மற்றும் போன் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும்.
நன்றி, மன்னிப்புடன்..."
மேற்கண்டவாறு எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில், தன் மனைவி ஷமிலாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக 10 பேரின் பெயர், அவர்களது முகவரி, செல்போன் எண் ஆகியவற்றையும் மகேஷ்குமார் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தக் கடிதத்தின் அடிப்படையிலும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ள பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அடிப்படையிலும் காவல்துறையினர் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
US la face book naala pirinthavargal ellam ondru serugirargal.Namma oorla kallakadhal,kolai,dhrogam-nu poguthu... Naama epadi use panrom-nu iruku...Thanni adikum pothey limit theriyama adikiranunga...First TV serial-ku censor varanum.. Yella problem-kum karaname TV serials than.. Kalla kadhal, kudumbathai pirikirathu, kolai seirathu,Kalyanam aanavan-nu therinjum kalla uravu.. Indraiya TV serial la ithellam illama 1 serial kooda illa..Except Mahan... Thirunthave matingada..!
ReplyDelete