Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

7 September 2011

கார்த்திக் மகனும் ராதா மகளும் ?

Karthika Nair
பழைய நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதமும் நடிகை ராதாவின் இரண்டாவது மகள் துளசியும் ஒரு
படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். அது வேறு யார் படமும் அல்ல... பிரபல இயக்குநர் மணிரத்னம் படம்.

கார்த்திக் - ராதா இருவரும் பாரதிராஜா மூலம் அறிமுகமானவர்கள். இவர்கள் இருவருமே ஒரு காலத்தில் ஓஹோ என்று பேசப்பட்ட ஜோடி. இருவரைப் பற்றியும் வராத கிசுகிசுக்களே இல்லை.

திருமணத்துக்குப் பிறகு ராதா நடிக்கவில்லை. தனது மூத்த மகளுக்கு அவர் கார்த்திகா எனப் பெயர் வைத்தார். இப்போது கோ பட வெற்றிக்குப் பிறகு கார்த்திகா வளரும் நடிகைகளில் முக்கிய இடம் பிடித்துள்ளார்.

அடுத்து ராதாவின் இன்னொரு மகள் துளசியும் நடிக்க வருகிறார். இவரை தனது அடுத்த படத்தின் நாயகியாக அறிமுகப்படுத்தும் மணிரத்தனம், அவருக்கு ஜோடியாக கார்த்திக் மகன் கவுதமை தேர்வு செய்துள்ளார். இந்திய சினிமாவில் முன்னாள் ஹீரோவின் மகனும் அவரது ஜோடி நடிகையின் மகளும் ஜோடியாக அறிமுகமாவது இதுவே முதல் முறை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!

இலங்கை ராணுவத்தால் துன்புறுத்தப் படும் தமிழக மீனவர்களின் பிரச்சினையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் காதல் கதை இந்தப் படம்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

No comments:

Post a Comment

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...