இப்போது அது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு 'நீதானே என் பொன்வசந்தம்' என பெயரிடப்பட்டுள்ளது. எண்பதுகளில் வெளியான இளையராஜாவின் மிகப் புகழ்பெற்ற பாடல் வரி இது.
இந்தப் படத்தில் எஞ்ஜினீயரிங் கல்லூரி மாணவராக ஜீவாவும் அவருக்கு ஜோடியாக சமந்தாவும் நடிக்கிறார்கள்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தைப் போன்ற இனிமையான ரொமான்டிக் படம் இது என கவுதம் மேனன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏ ஆர் ரஹ்மான் இசையக்க, எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். தெலுங்கிலும் இந்தப் படம் ஒரே நேரத்தில் கதவும் தயாராகிறது. தெலுங்கில் ஹீரோவாக ராம் நடிக்கிறார். இந்தப் படத்திலும் ஹீரோயினாக சமந்தாவே நடிக்கிறார்.
ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் மற்றும் கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் இணைந்து தயாரிக்கும் படம் இது.
No comments:
Post a Comment