விளம்பரத்துக்காகவும், புதிய வாய்ப்புகளைத் தேடவும், தன்னைப் பற்றி தானே வதந்திகளைப் பரப்பி வருகிறார் நடிகை அசின் என பாலிவுட்
இயக்குநர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பெரிய வாய்ப்புகளை எதிர்ப்பார்த்து பாலிவுட் போனார் அசின். முதல் படம் மட்டுமே வெற்றிகரமாக அமைந்தது. அடுத்த படம் படுதோல்வி அடைந்தது. மூன்றாவது படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது.
பாலிவுட்டில் இரண்டே படங்களில் நடித்துள்ள அசின், பழம் தின்று கொட்டை போட்ட சீனியர் நடிகைகளையெல்லாம் மிஞ்சிவிட்டார், நடிப்பில் அல்ல, வதந்திகளில் இடம்பெறுவதில்.
ஆனால் இப்போதுதான் தெரிகிறது, அந்த வதந்திகள் எல்லாம் அசினாலேயே கிளப்பிவிடப்பட்டவை என்று.
ஷாருக்கானுடன் நடிக்கிறேன், நீல் நிதின் முகேஷுடன் ஜோடி என்றெல்லாம் இவராகவே கிளப்பி விட்ட செய்திகளாம். உண்மையில் இவர் கைவசம் ஒரே ஒரு இந்திப்படம்தான் உள்ளது என்கிறார்கள்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு பேட்டியளித்துள்ளார் பாலிவுட் இயக்குநர் ஒருவர். அவர் பெயர் ரிதே ஷெட்டி. நஸ்ருதீன் ஷா நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் இவர்.
இவரது இயக்கத்தில் அசினும் நீல் நிதின் முகேஷும் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது நினைவிருக்கலாம். ஆனால் உண்மையில் தனக்கு இப்படியொரு படம் செய்யும் ஐடியாவே இல்லை என்றும், இதனை அசின்தான் கிளப்பிவிட்டிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிக சம்பளம் கேட்கிறார், அவரது பெற்றோர்களின் தலையீடு போன்றவை குறித்தும் பாலிவுட்டில் புகார்கள் குவிய ஆரம்பித்துள்ளன.

No comments:
Post a Comment