Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

21 October 2011

வேலாயுதம், ஏழாம் அறிவு - OK

உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து வரும் படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. ஹன்சிகா நாயகியாக நடிக்க ராஜேஷ் இயக்கி வருகிறார். படத்தின் பெயரை சுருக்கி OK OK என்றே இணையதளங்களில் குறிப்பிடப்படுகிறது.

இப்படத்தின் FIRST LOOK சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் 'ஏழாம் அறிவு' படத்துடன் வெளிவர இருக்கிறது. படத்தின் பாடல்கள் இன்னும் தயார் ஆகாத காரணத்தினால் ' ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின்
TEASER மட்டுமே வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'வேலாயுதம்' படத்துடனும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் TEASER வெளிவர இருக்கிறது. விஜய்யும் உதயநிதி ஸ்டாலுனும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது இணையத்தில் கூறியிருப்பது " ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் TEASER விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'வேலாயுதம்' படத்துடனும் வெளிவர இருக்கிறது. ஆஸ்கார் ரவிச்சந்திரன் சாருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் " என்று கூறியுள்ளார்.

தீபாவளி தினத்தன்று ' வேலாயுதம்', 'ஏழாம் அறிவு' என இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களுடன் தான் நாயகனாக அறிமுகமாகும் படத்தின் TEASER வெளிவர இருப்பதால் கடும் சந்தோஷத்தில் இருக்கிறாராம் உதயநிதி ஸ்டாலின்.

மார்க்கெட்டிங் ல கலக்குறாரு நம்ம உதயநிதி!

No comments:

Post a Comment

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...