உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமாகும் படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. ஹன்சிகா நாயகியாக நடிக்க, ராஜேஷ் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் படம் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து இயக்குனர் ராஜேஷ் தனது டிவிட்டர் இணையத்தில் கூறியிருப்பது :
'7ம் அறிவு' படத்துடன் வெளியிட 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் TEASER தயார் செய்து வருகிறேன். முதலில் படத்தின் பாடல்கள் மற்றும் TEASER-ஐ வெளியிட தீர்மானித்தோம். ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது ' 7ம் அறிவு ' படத்தின் பின்னணி இசையில் பிஸியாக இருப்பதால் முடியாமல்
போயிற்று.
டிசம்பர் மாதம் படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறோம். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் டிரெய்லருடன், பாடல்கள், வசனங்கள் அனைத்தும் கண்டிப்பாக இருக்கும். இப்படத்திலும் உதயநிதி மற்றும் சந்தானத்திற்கு TAGLINE இருக்கும்.
எனக்கு அஜீத் மற்றும் விஜய் சாருடன் பணியாற்ற வேண்டும் என்று ஆசை தான். அதற்கான நேரமும் கதையும் அமைந்தால் கண்டிப்பாக செய்வேன்.
'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தினை எனது முந்தைய படங்களான பாஸ் (எ) பாஸ்கரன், சிவா மனசுல சக்தி ஆகிய படங்களுடன் கம்பேர் பண்ண வேண்டாம். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதை. இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்காக கார்த்தியுடன் இணைந்து அடுத்த படம் செய்கிறேன்.. இப்போது எனது முழு கவனமும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' மீது தான் "
No comments:
Post a Comment