ஆதி, பசுபதி நடிக்க வசந்தபாலன் இயக்கி இருக்கும் படம் 'அரவான்'. 'சரோஜா' படத்தினை தயாரித்த அம்மா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. பின்னணி பாடகர் கார்த்திக் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இசை வெளியீட்டை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தின் இசையை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட, இயக்குனர் மணிரத்னம் பெற்றுக் கொள்கிறார். திரையுலகை சேர்ந்த முக்கிய இயக்குனர்கள் பலரும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள்.
சு.வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்' என்ற நாவலில் இருந்து ஒரு சிறு பகுதியை எடுத்துக் கொண்டு, திரைக்கதை அமைத்து இப்படத்தில் கூறி இருக்கிறாராம் வசந்தபாலன்.
பரத் மற்றும் அஞ்சலி இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள்.

No comments:
Post a Comment