சூர்யா நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளிவர இருக்கும் படம் 'ஏழாம் அறிவு'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்.
தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் இப்படத்தினை வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று காலை முதல் ஆரம்பம் ஆனது.
டிக்கெட் ரிசர்வேஷன் ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தன. சென்னையில் தேவி, கமலா, சங்கம் ஆகிய திரையரங்குகளில்
முதல் 5 நாட்களுக்கான டிக்கெட்கள் விற்றுவிட்டனவாம்.
சத்யம், ஐநாக்ஸ், PVR, ESCAPE மற்றும் FAME ஆகிய திரையரங்குகள் டிக்கெட் விற்பனை சனிக்கிழமை (அக்டோபர் 22 ) இரவு முதல் துவங்க இருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தனது இணையங்களில் படத்தினை பரபரப்பாக விளம்பரப்படுத்தி வருகிறார். எந்த எந்த ஊர்களில் எந்த எந்த தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது போன்ற முழு தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் சூர்யா கூட்டணிக்கு இருக்கும் ஓப்பனிங் இப்படத்தின் டிக்கெட் விற்பனையின் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது.
More:

No comments:
Post a Comment