Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

17 October 2011

விஜய், சூர்யா - இதுதாண்டா போட்டி! - ரசிகர்கள்!

வேலாயுதம் படம் தீடீரென்று தீபாவளி போட்டியில் இருந்து விலகிக்கொள்ள உத்தேசித்தாக உறுதியான தகவல்கள் உலா வந்தன கோடம்பாக்கத்தில். திடீர் விலகலுக்கு காரணமாகச் சொல்லப்பட்டத்து சரியான தியேட்டர்கள் அமையவில்லை என்பது.ஆனால் நிஜமான காரணம் 7-ஆம் அறிவு படத்துக்கு வேலாயுதம் போட்டியாக அமைய முடியாது என்று தெரிய வந்ததாலேயே இந்த முடிவை எடுத்தார்கள் என்று தகவல்கள்
கசிந்தன.

7-ஆம் அறிவு படம், கதை, திரைக்கதை, எண்டெர்டெயிண்மெண்ட், மேக்கிங், என எல்லாவற்றிலும் பிரிலியண்டான படமாக இருக்கிறது என்ற தகவல் விஜய் வட்டாரத்துக்கு தெரிய வந்ததும் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்கிறார்கள்.

ஆனால் வேலாயுதம் தீபாவாளிக்கு பின் வாங்கினால் ரசிகர்கள் மத்தியில் விஜய்க்கு செல்வாக்கு குறையும் என்று மன்ற நிர்வாகிகள், விஜயின் அப்பா எஸ்.ஏ.சியிடம் கருத்து சொல்லியிருகிறார்கள்.

இதனால் ஒவ்வோரு மாவட்டத்திலும் குறைந்தது 100 விஜய் ரசிகர்களிடம், வேலாயுதம் தீபாவளிக்கு வராவிட்டால் எப்படி எடுத்துக்கொள்வீர்கள் என்று கேட்டு கருத்துக் கணிப்பு நடத்தசொன்னார்களாம்.

இரண்டே நாட்களில் இந்த கருத்து கணிப்பை எடுத்து முடித்து அனுப்பி வைத்தார்களாம் மன்ற நிர்வாகிகள். இந்த அதிரடிக் கருத்து கணிப்பில் தெரிய வந்திருப்பது “ 7-ஆம் அறிவு படத்துடன் வந்தால்தான் உண்மையான போட்டியாக இருக்கும்.


வேலாயுதம் தீபாவளிக்கு வெளியாக விட்டால், சூரியா படத்துக்காக பயந்து பின் வாங்கி விட்டதாக இருக்கும். இது நமக்கு பின்னடைவாகி விடும் என்று 80 சதவிகிதம் ரசிகர்கள் கருத்து சொல்லியிருகிறார்களாம்.

உண்மையில் வேலாயுதம் விஜய் ரசிகர்களின் இந்த நம்பிக்கையை காப்பாற்றுமா, 7-ஆம் அறிவுக்கு சரியான போட்டியாக அமையுமா என்று வேலாயுதம் இயக்குனர் வட்டாரம், விஜய் ரசிகர்கள், பொதுவான சினிமா ரசிகர்கள் என நாம் ஒரு சிறு கருத்துக் கணிப்பில் இறங்கினோம். அதில் நமக்குகிடைத்தன பல அதிரடித் தகவல்கள்.

நிச்சயமாக விஜயின் முந்தைய படங்களை போல் அல்லாமல் வேலாயுதம் மாஸ் எண்டெர்டெயினர் என்பதில் சந்தேகமில்லை. இம்முறை விஜய் அளவாக படம் முழுவதும் பேசியிருகிறார்.

ஏற்கனவே வந்து ஹிட்டாகியிருக்கும் பாடல்களையும், சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் வேலாயுதம் ட்ரைலரையும் பார்த்தபின்பு, படம் தோற்பது உறுதி என்று கூறி வரும் பலருக்கும், வேலாயுதம் பற்றி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருகிறது என்கிறார்கள்.

அத்துடன் எல்லோரும் விஜயின் சிக்ஸ் பேக் பற்றியும்பேசிக்க்கொண்டிருகிறார்கள். அது ஊசி, கிராபிக்ஸ் என்று சிலர் கூறினாலும் நிச்சயம் அப்படி கூறுபவர்களுக்கும் ஓர் எதிர்பார்ப்பு உண்டு என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள்.

அதேசமயம் விஜய் படத்தை ஒருமுறை பார்க்க விரும்பும் மற்ற ஹீரோக்களின் ரசிகர்களிடம், வேலயுதம் படத்தின் டிரைலர் பல கேள்விகளைஎழுப்பியுள்ளது! அதாவது இந்த அளவு ஆக்‌ஷனை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதுதான் அந்தக் கேள்வி!

இதற்கு எடுத்துக்காட்டாக காவலனுக்கு முன்னர் வந்த ஐந்து படங்களின் தோல்வியை கூறினாலும் அவற்றின் தோல்விக்கு ஆக்‌ஷன் மட்டுமே காரணமாகாது.

குருவி போன்ற அதீத, மக்கள் நம்பமுடியாத, லாஜிக் இல்லாத ஆக்‌ஷனும், ஓவர் பஞ்ச் வசனங்களுமே அவற்றின் தோல்விக்கு காரணமாக இருந்தன.
அதை விட அவற்றில் கதை குறைவாகவும் , சில நல்ல கதைகள் கூட விஜய்க்காக மாற்றப்பட்டு சிதைக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அதனாலேயே சில படங்கள் விஜய் ரசிகர்களாலேயே ஏற்கமுடியாமல் போய்விட்டது என்பது இவர்கள் கருத்து.

வேலாயுதத்துக்கும் இதே நிலையா என்று விஜய் ரசிகர்களிடம் கேட்டால் கொதித்துப் போகிறார்கள்.…! நிச்சயமாக விஜய் படங்களின் ஆக்‌ஷன் காட்சிகள் தோல்விக்கான காரணமாக இருந்ததில்லை.

படத்தின் கதையில் பலகீனம் இருந்தால் விஜய் படங்கள் தோற்று இருக்கலாம். ஆனால் விஜய் போல ஆக்‌ஷன் காட்சிகளில் வேகம் காட்ட இங்கே அர்ஜூன் மட்டும்தான் இருகிறார். ஆனால் எங்கள் விஜயிடம் ஆக்‌ஷனோடு ஸ்டைலும் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

வேலாயுதம் படத்தின் கதை தெலுங்கு ஆசாத்தின் தழுவல் என்றாலும், இன்றைய காலகாட்டத்துக்கு ஏற்ப அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஏற்கனவே இயக்குனர் ராஜா கூறியிருக்கிறார்.

விஜயின் அதீத பில்ட் அப்புகள், ஓவர் பஞ்ச் வசனங்கள் தவிர்க்கப்பட்டிருந்தால் வேலாயுதம் பெரிய வெற்றிதான்! அதேநேரம் கில்லியில் அதீத பஞ்ச் வசனங்கள் இருந்தாலும் வேகமான திரைக்கதையாலும், தேவையான இடங்களில் மாத்திரம் பஞ்ச் வசனங்களை பயன்படுத்தியதாலும் அது விஜய் ரசிகர்கள் அல்லாதவர்களும் ஏற்கக்கொள்ளப்பட்டது என்கிறார் கோலிவுட்டின் பிரபல சினிமா விமர்சகர்.

ஆக 7-ஆம் அறிவு, வேலாயுதம் கொஞ்சம் சரிக்கு சரி போட்டியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்கள். பார்க்கலாம்…

No comments:

Post a Comment

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...