சமீபத்தில் நடந்த ஒரு திரையிசை வெளியீட்டு விழாவில் பேசினார் மூத்த தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர்
பஞ்சு அருணாசலம். “ அன்னக்கிளி படத்தில் நான் இளையராஜாவை
அறிமுகபடுத்தியபோது அவருக்கு நான் கொடுத்த சம்பளம் மூவாயிரத்து ஒன்று. ஆனால் நூறு படங்களுக்கு இசையமைத்த பிறகுதான் தனது ஊதியத்தை ஒரு லட்ச ரூபாயாக உயர்த்தினார். ஆனால் இன்று ஒரு வெற்றியைக் கொடுத்து விட்டு ஒரு கோடி சம்பளம் கேட்கிறார்கள்” என்றார்.
வெற்றியின் உச்சியில் இருக்கும் பல இசையப்பாளர்கள் கேட்கும் சம்பளம் இங்கே கோடிகளில்தான். ஆனால் ஒருவர் மட்டும் விதிவிலக்கு!
பூ, களவானி, என வரிசையாக வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த எஸ்.எஸ்.குமரன், வந்த வேகத்திலேயே தமிழ்ரசிகர்களை வசீகரித்துக் கொண்டார்.
அடிப்படையில் இவர் ஒரு ஆவணப்பட இயக்குனர். தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் ஒளிபதிவை பயின்றவர். தமிழின் கிராமிய இசை, கர்நாடக பாரம்பரிய இசை இரண்டின் வேர்களையும் விட்டு விடாமல், குறைவான ஊதியத்தில் நிறைவான திரையிசை வழங்கி வந்தார். இடையில் இவருக்குள் இருந்த இயக்குனர் விழித்துக் கொள்ள “ தேநீர் விடுதி” என்ற படத்தை இயக்கினார். படம் தரமாக இருந்தாலும், திமுக ஆட்சியில் தியேட்டர்கள் கிடைக்காததால் ரசிகர்களை எட்டாமல் போனது இவரது படம். என்றாலும் மனம் தளராமல் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ என்ற இரண்டாவது படத்தை இயக்கும் வேலைகளை ஆரம்பித்தார்.
இந்நிலையில் இவரது இசைக்காக காத்திருந்த இளம் இயக்குனர்கள் இவரிடம் சண்டைகே வந்து விட்டார்களாம். இயக்கத்தில் செலவழித்த ஒரு வருடத்தை இசைக்கு செலவழித்திருந்தால் இந்நேரம் உங்களுக்கு தேசிய விருது கூட கிடைத்திருக்கும் என்றார்களாம். சினிமாவில் நண்பர்கள் அமைவது…! குமரன் அலுவலகத்திலோ எப்போதும் புதுமுக இயக்குனர்களின் ஜமாதான்! விளைவு! படம் இயக்குவதை கைவிட்டு இசைக்குத் திரும்பிவிட்டார் எஸ்.எஸ்.குமரன்!
No comments:
Post a Comment