இதுவரை தமிழக, கேரள ஃபாக்ஸ் ஆபீஸ் உட்பட மொத்தம் 52 கோடி ரூபாய் வாசூல் செய்திருகிறதாம் மங்காத்தா. ஆனால்
காஞ்சனா 85 கோடியை தாண்டிவிட்டதாக ஃபாக்ஸ் ஆபீஸில் பூரித்து போகிறார்கள் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள்.
தற்போது அஜித் அமைதியாக பில்லா இரண்டில் நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் பிரபல தமிழ் வார இதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில் “ ஒரு படத்திலாவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாகி, அவர் கையால் அடிவாங்க வேண்டும். அன்றுதான் என் சினிமா பயணம் பூர்த்தியடையும்” என்று நெகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் மிகப்பெரிய ரசிகர், ரஜினியை கடவுளாகவே ஏற்றுக்கொண்டவர் தல அஜீத். தமிழ் சினிமாவில் முன் மாதிரியாக பின்பற்றி வருகிறார் அஜித்! அவரது இந்த அணுகுமுறை ஏராளமான புதிய ரசிகர்களை அஜித்தை நோக்கி ஈர்த்துள்ளது, குறிப்பாக ரஜினி ரசிகர்கள்., ரஜினிக்கு அடுத்த இடத்தில் அஜித்தை அதிகம் விரும்புவதாக லயோலா கல்லூரி மாணவர்களின் புள்ளியியல் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வை அஜித்தும் ஆமோதிப்பதுபோல பேட்டி அளித்திருக்கிறார். அந்தப்பேட்டியில்.. உங்கள் அடுத்த ஆசை என்ன அஜீத்திடம் பேட்டியாளர் கேட்டதற்கு அவர் நெகிழ்ந்து சொல்லியிருப்பது,“ எனக்கு நம்பர் ஒன், நம்பர் டூவில் ஈடுபாடில்லை. அந்த எண்ணங்களும் இப்போது மனதில் இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரி யாராகத்தான் ரஜினி சாரைப் பார்க்கிறேன். அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் கவலை இல்லை. நான் ஏகலைவன் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்.
சூப்பர் ஸ்டாரை நான் தூரத்திலிருந்து பார்த்து ரசித்தபடி படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன். ரஜினி சார் நடிக்க வேண்டும். அவர் படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும். அவர் கையால் நான் அடி வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ, அன்று என் சினிமா பயணம் ஒரு முழுமையடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம். மங்காத்தாவின் மாபெரும் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்!” ரஜிகிக்கு இப்படியொரு நட்சத்திர ரசிகரா?
No comments:
Post a Comment