சென்னை: ஃபேஸ்புக், டுவிட்டர், எப்எம், வானொலி ஆகியவற்றில் நான் பேசுவதுபோன்று பொய்யான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வரும் ஊடகங்கள்
அவற்றை உடனே நிறுத்தாவிட்டால் வழக்கு தொடருவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் எச்சரித்துள்ளார். இது குறித்து தேமுதிக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஃபேஸ்புக், டுவிட்டர், எஃப்.எம்., வானொலி போன்ற ஊடகங்களில் நான் பேசுவது போன்று பொய்யான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன என்று என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இது போன்ற ஊடகங்களிடம் நான் பேசவோ, பேட்டியளிக்கவோ இல்லை. இதற்கு மேலும் இந்த ஊடகங்கள் என் பெயரினைத் தவறான நோக்கத்தோடு பயன்படுத்தினால் சட்டப்படி வழக்கு தொடரப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment