லண்டன்: உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, தனக்கு செருப்பு வாங்குவதற்காக மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. இதற்காக மாநில அரசுக்கு ஏற்பட்ட செலவு ரூ. 10 லட்சமாகும்.
கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இந்திய அரசியல் தலைவர்கள் தொடர்பாக, தனது தலைமையகத்துக்கு அனுப்பி ரகசிய கேபிளில் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
அதில், மாயாவதிக்கு ஆடை, அலங்காரத்தில் ஆர்வம் மிக மிக அதிகம். புதிதாக காலணி வாங்க வேண்டுமானால் தனது ஜெட் விமானத்தை மும்பைக்கு அனுப்பி விருப்பப்பட்டவற்றை மாயாவதி வாங்கி கொள்வார்.
அவருக்கு தனது பாதுகாப்பு விஷயத்திலும் பயம் மிக மிக அதிகம். உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காகவே சிலரை பணிக்கு அமர்த்தியுள்ளார்.
அதே போல, ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளின் போது, கட்சி உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரிடமிருந்து கோடிக்கணக்கில் பரிசு பொருட்களை வலுக்கட்டாயமாக பெற்றுக் கொள்வதும் மாயாவதியின் வழக்கம் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இந்தத் தகவல் முட்டாள்தனமானது என்று கூறியுள்ளார் மாயாவதி. விக்கலீக்ஸ் நிறுவனரை மனநல மருத்துவமனையில் தான் சேர்க்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
//உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, தனக்கு செருப்பு வாங்குவதற்காக மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. இதற்காக மாநில அரசுக்கு ஏற்பட்ட செலவு ரூ. 10 லட்சமாகும்.//இந்தமாதிரி நபர்கள் இருக்கும் வரை இந்திய ஏழ்மை நாடுதான் மக்கள் பணத்தை இப்படி விரயம் செய்கிறாக்கள் !!!!!!!!!!!!
ReplyDelete