Sponcer
Today's Quotes:
7 September 2011
தூக்கியெறியப்பட்ட யாஹூ சிஇஓ கரோல் பட்ஸ்... பங்குகள் விலை 'ஜிவ்'!
சான் பிரான்சிஸ்கோ: யாஹூ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கரோல் பட்ஸ் தூக்கியெறியப்பட்டார். அவருக்கு பதில் இடைக்கால சிஇஓவாக டிம் மோர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாஹூவின் தலைவர் பஸ்டாக் போனில் கடுமையாகத் திட்டி, கரோல் பட்ஸை நீக்கியுள்ளார். இதன் விளைவாக இதுவரை வீழ்ச்சிப் போக்கிலிருந்த யாஹூவின் பங்குகள் கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளன.
2009-ம் ஆண்டு மிக நெருக்கடியான காலகட்டத்தில் யாஹுவின் சிஇஓவாக பதவி ஏற்றார் கரோல் பட்ஸ். ஆனால் அவரால் பெரிய அளவில் எதையும் சாதிக்க முடியவில்லை.
படிப்படியாக இணைய உலகில் தனது செல்வாக்கை இழந்த யாஹூ, கடந்த நிதியாண்டில் விளம்பர வருவாயில் கணிசமான இழப்பைச் சந்தித்தது.
இது யாஹூவின் பங்குகள் விலையை சரிவுக்குள்ளாக்கியது. இதனால் கரோல் பட்ஸ் மீது யாஹூவின் இயக்குநர் குழு கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் வெளியிட்டது.
இந்த நிலையில், யாஹூவின் தலைவர் ராய் பஸ்டோக், கரோல் பட்ஸை போனில் கடுமையாகப் பேசியுள்ளார். நிறுவனத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள், அதற்கு துணை நிற்க நல்ல டீம் என அனைத்துமிருந்தும் சரியாக பயன்படுத்தாமல் போனதாக அவர் காய்ச்சி எடுத்தாராம்.
இதன் விளைவாக, யாஹூ இயக்குநர் குழு கூடி, உடனடியாக கரோல் பட்ஸை பதவி நீக்கம் செய்துவிட்டது. இடைக்கால சிஇஓவாக டிம் மோர்ஸ் நியமிக்கப்படுவதாகவும், புதிய நிரந்தர சிஇஓ வரும் வரை அவர் இப் பதவியில் இருப்பார் என்றும் யாஹூ அறிவித்துள்ளது.
இந்த பதவி நீக்கம் குறித்து யாஹூ ஊழியர்களுக்கு கரோல் பட்ஸ் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், "யாஹூ தலைவர் சற்று முன்னர்தான் என்னை போனில் கடுமையாக கடிந்து கொண்டார். இத்துடன் யாஹூவிலிருந்து விடைபெறுகிறேன். அனைவருக்கும் வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்" என்று சோகத்துடன் தெரிவித்துள்ளார்.
செயல் தலைமை கவுன்சில்
கரோல் பட்ஸின் நீக்கத்தைத் தொடர்ந்து, யாஹூவின் அதிவேக வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் படி, டிம் மோர்ஸின் அன்றாட பணிகளில் அவருக்கு உறுதுணையாக இருக்க செயல் தலைமை கவுன்சில் என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் யாஹூ செயல் துணைத் தலைவர் உள்பட 6 முக்கிய அதிகாரிகள் அடங்குவர். நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்த நடவடிக்கைகளில் இந்த கவுன்சில் பிரதான அங்கம் வகிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் முழு நேர சிஇஓ பதவிக்கு பொருத்தமான நபரைத் தேடும் பணியில் மும்முரமாகிவிட்டது யாஹூ!
பங்குகள் விலை உயர்வு
கரோல் பட்ஸின் நீக்கம் முதலீட்டாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. நாஸ்டாக்கில் இதுவரை 12.91 டாலராக இருந்த யாஹூ பங்கு விலை, இன்று ஒரே நாளில் ஒரு டாலர் வரை உயர்ந்து 13.72 ஆக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment