மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் துவங்கியதாக முதன்முதலில் அறிவித்தது தட்ஸ்தமிழ் இணையதளம். அதன் பிறகு
அந்தப் படம் தொடர்பாக மணிரத்னம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் அறிவித்து வந்தோம். இந்தப் படத்துக்காக மைசூர் லலிதமகாலை அவர் பார்வையிட்டது வரை தொடர்ச்சியாக செய்திகளைத் தந்திருந்தோம்.
ஆனால் சில பல காரணங்களால் பொன்னியின் செல்வன் கைவிடப்படும் சூழல் எழுந்தது. அது குறித்த செய்தியையும் முதன்முதலில் நமது தட்ஸ்தமிழ்தான் வெளியிட்டது என்பது நினைவிருக்கலாம்.
இதோ, நாம் சொன்ன செய்தியை மணிரத்னமே உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆம்... பொன்னியின் செல்வன் முயற்சி கைவிடப்பட்டது என அவர் கூறியுள்ளார். இந்தப் படத்துக்காக அட்வான்ஸ் தரப்பட்டு, கால்ஷீட் பெறப்பட்ட விஜய் உள்ளிட்ட அத்தனை நடிகர் நடிகைகளுக்கும் படம் கைவிடப்பட்டது என்ற தகவலை மணிரத்னமே அனுப்பியுள்ளார்.
பொன்னியின் செல்வன் என்ற பிரமாண்ட நாவலைப் படமாக்குவதில் உள்ள நடைமுறை சிரமங்கள், அதற்காகும் பெரும் நிதியை தர நிறுவனங்கள் முன்வராத நிலை மற்றும் இந்தப் படத்துக்கான வியாபாரம் குறித்த நிச்சயமற்ற நிலை.. போன்றவை காரணமாகவே மணிரத்னம் இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறுகிறார்கள். மேலும் படத்தைத் தயாரிக்கவிருந்த பிரபல சேனலுக்கும் படத்தின் நாயகன் விஜய்க்கும் ஒத்துப் போகாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
பொன்னியின் செல்வன் முயற்சியை கைவிட்டாலும், அடுத்து ஒரு பெரிய நட்சத்திரத்தை வைத்து தளபதி ரேஞ்சுக்கு பக்கா ஆக்ஷன் படம் தரும் திட்டமும் உள்ளதாம் மணிரத்னத்துக்கு. இந்த முயற்சியாவது கை கூடட்டும்!
No comments:
Post a Comment