நடிகர் விஜய்யின் 'வேலாயுதம்', மற்றும் 'நண்பன்' படங்களைத் தொடர்ந்து அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்தினை
இயக்குபவர் சீமானா, ஏ.ஆர்.முருகதாஸா? என்ற கேள்வி எழுந்தது. தற்போது டைரக்டர் முருகதாஸ் இயக்கத்தில்தான் விஜய் நடிக்கப்போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனோடு விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இப்படத்தில், விஜய்யின் ஜோடியாக பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி கிங்பிஷர் நிறுவனத்தில் மாடலான ஏஞ்சலா ஜான்சன் என்பவரை இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறாராம். இன்னும் பெயரிடப்படாத இப்படம் வரும் அக்டோபர் மாதம் தனது ஷூட்டிங்கை துவங்க இருக்கிறதாம். இந்த ஏஞ்சலா ஜான்சன் பார்ப்பதற்கு ஒரு சாயலில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயைப் போல் இருப்பாராம். இவர் ஒரு ஹிந்திப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். எத்தன சாயல்ல பாத்தாலும் ஐஸூக்கு ஈடாக முடியாதுங்கோ.......
No comments:
Post a Comment