சிம்பு, ரிச்சா நடித்து வரும் படம் 'ஒஸ்தி'. தரணி இயக்க தமன் இசையமைத்து வருகிறார். பாலாஜி ரியல் மீடியா தயாரித்து வருகிறது.
இப்படம் குறித்தும் தனது அடுத்த படங்கள் குறித்து சிம்பு தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பது : " 87 நாட்கள் ஒரே ஷெட்டியூலில்
நடைபெற்ற 'ஒஸ்தி' படப்பிடிப்பு முடிவு பெற்றது.
இயக்குனர் தரணி மற்றும் மொத்த படக்குழுவினரின் உழைப்பு அசாத்தியமானது. கடுமையான உழைப்பு தோற்காது.

'ஒஸ்தி' படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை மட்டும் முதலில் வெளியிடலாம் என்று நினைத்தோம். ஆனால் அக்டோபர் 6-ம் தேதி 'ஒஸ்தி' படத்தின் இசையை டிரெய்லருடன் வெளியிட முடிவு செய்திருப்பதால், ஒரு பாடல் வெளியீடு செய்ய போதிய அவகாசமில்லை. 4 பாடல்கள் முடிந்துவிட்டன. முன்னி பாடலும் இவ்வார இறுதியில் முடிந்துவிடும்.
'கெட்டவன்' படத்திற்காக புதிதாக ஒரு கதை மற்றும் திரைக்கதை அமைத்து இருக்கிறேன். முதலில் எழுதப்பட்ட கதை சரியாக அமையவில்லை என நான் கருதியதால் படம் கைவிடப்பட்டது. புதிய கதை உங்கள் அனைவரயையும் கவரும் விதத்தில் அமையும்.
நான் மன்மதன் -2 க்கான கதையில் கவனம் செலுத்தி வருகிறேன். "
No comments:
Post a Comment