Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

19 October 2011

விஜய் ரசிகர்களையும் மடக்க திட்டம் போடும் சிம்பு!

சிம்பு, ரிச்சா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'ஒஸ்தி'. தரணி இயக்க, தமன் இசையமைத்து வருகிறார். பாலாஜி ரியல் மீடியா தயாரித்து வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ( அக்டோபர் 19 ) சென்னையில் நடைபெற்றது.

திரையுலக பிரபலங்கள் பலரும் இசை வெளியீட்டு பங்கேற்றனர். 6 மணிக்கு துவங்க வேண்டிய விழா பல்வேறு காரணங்களால் மிக தாமதாகவே
தொடங்கியது. இசை வெளியீட்டு விழா தகவல் துளிகள் :

* இசை வெளியீட்டின் தொகுப்பாளராக 'நண்டு' ஜெகன் பிக்பாக்கெட் கெட்டப்பில் தோன்றி நகைச்சுவையான் தனது பேச்சின் மூலம் இசை வெளியீட்டை ஆரம்பித்து வைத்தார். அவர் பேசும்போது "நான் திருடின பொருட்களில் ஒஸ்தியானது இந்த விக் தான். இது தான் பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா படத்தில் யூஸ் பண்ணது " என்று கூற அரங்கம் முழுவதும் சிரிப்பு சத்தம்.

* முதல் பாடலாக 'ஒஸ்தி மாமு' பாடலை பாடினார்கள். அப்பாடல் பாடி கொண்டிருக்கும் போது நடிகர் விஜய் அரங்கினுள் நுழைய, ரசிகர்கள் கூக்குரலால் அரங்கம் அதிர்ந்தது.

* கண் தெரியாத குழந்தைகளுக்காக அவ்விழாவில் நிதி திரட்டப்பட்டது. நிதி திரட்டல் பெட்டியில் முதலில் நிதி போட்டு ஆரம்பித்து வைத்தார் விஜய். அவரை தொடர்ந்தார் சிம்பு.

* தொடர்ந்து 'உன்னாலே உன்னாலே' பாடலை பாடினார் தமன்.

* 'உன்னாலே உன்னாலே' பாடல் குறித்து கருத்து கேட்க ஜெய், பிரேம்ஜி, வைபவ் ஆகியோரை மேடைக்கு அழைத்தார் 'நண்டு' ஜெகன். அம்மூவரும் பாடல் அருமையாக இருந்தாக கூறினர்.

* 'நெடுவாழி' என்ற பாடலுக்கு நடன கலைஞர்கள் ஆடினார்கள்.

* 'நெடுவாழி' பாடல் பற்றி விஜயகுமார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள். விஜயகுமார் " ஒஸ்தி படம் கண்டிப்பாக ஒஸ்தியான படமாக இருக்கும் " என்றார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் " மேடை ஏறியவுடன் ரஜினி எப்படி இருக்கிறார் என்று கேட்டார் விஜயகுமார். ரஜினி நன்றாக இருக்கிறார் இன்னும் கொஞ்சம் STRENGTH வேணும்.. அதற்காக மட்டும் காத்து இருக்கிறோம். கண்டிப்பாக 'ஒஸ்தி' படம் வெற்றி படம் தான். " என்றார்.

* சிம்பு தான் எழுதி பாடிய 'பொண்டாட்டி' பாடலை நடனம் ஆடி கொண்டே பாட அரங்கம் முழுவதும் விசில் சத்தம்.

* அப்பாடலைத் தொடர்ந்து, படத்தில் 'கலசலா' என்ற பாடலை பாடிய டி.ஆரை மேடையில் பாட அழைத்தார்கள். ஆனால் அவரோ முடியாது என்று கூற இயக்குனர் தரணி கண்டிப்பாக பாட வேண்டும் என்று கூறி மேடை ஏற்றினார்.

* போலீசார் ரசிகர் மன்றத்தின் பேனர்களை கிழித்து விட்டதார்கள் என்று அடுக்கு அடுக்காக பேச்சை தொடங்கியவர். போக போக தனக்கே உரிய அடுக்கு மொழி பாணியில் பேச்சை தொடர்ந்தார். " நான் பேசினா அம்பு.. என்கிட்ட வச்சிகாத வம்பு.. எனக்கு போகாது தொம்பு.. இங்கிருந்து வந்தவன் தான் சிம்பு " என்று கூறினார்.

* டி.ஆர் தனது பேச்சில் இடையே தனது இசை அனுபவங்களையும் மற்றும் இசை கச்சேரி நடத்த அதனை கை தட்டி ரசித்தார் விஜய்.

* எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து 'கல்சலா' பாடியதால், அவர் இல்லாமல் என்னால் பாட முடியாது என்று கூறவே 'கலசலா' பாடல் ஒலிக்க அதற்கு நடன கலைஞர்கள் நடனமாடினார்கள்.

* அப்பாடலை தொடர்ந்து பாக்யராஜ் மற்றும் டி.ஆர் இருவரும் மேடை ஏறி படத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அப்போது பாக்யராஜ் " டி.ஆருக்கும் சிம்புவிற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது என்னவென்று தெரியுமா" என்று கேட்க, ரசிகர்கள் " தாடி தான் அது" என்று கூறினார்.
அதற்கு அவர் " இல்லை.... டி.ஆர் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்கியது இல்லை. ஆனால் சிம்பு கிசுகிசுக்களில் அடிக்கடி சிக்கி கொள்கிறார் " என்று கூறினார்.

* அதன் பிறகு பேசிய 'நண்டு' ஜெகன் " எனக்கு ஒரு வித்தியாசம் தெரியுமே.. டி.ஆர் இதுவரைக்கும் கிஸ் பண்ணதே இல்லை.. எஸ்.டி.ஆர் இதுவரைக்கும் எந்த கிஸ்ஸையும் மிஸ் பண்ணதே இல்லை " என்று கூற, அரங்கினுள் சிரிப்பு சத்தம்.

* அனைத்து பிரமுகர்களையும் மேடைக்கு அழைத்தார்கள். அனைவரும் மேடை ஏற 'நண்டு' ஜெகன் " எங்கப்பா வெளியிட வேண்டிய சிடி-ய காணும் என்று கூற பின்னணியில் சிம்பு " எலே எவம்ல அது சவுண்ட் விடுறது... " என்று தனது 'ஒஸ்தி' போலீஸ் கெட்டபில் பேசினார்.

* நடிகர் விஜய் இசையை வெளியிட கவிஞர் வாலி பெற்றுக் கொண்டார்.

* படம் மற்றும் இசையை பற்றி விஜய் பேசுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இசை வெளியீடு முடிந்ததோடு, இசை வெளியீட்டு விழா முடிவுற்றது.

டிஸ்கி: விஜய் கூட நடிக்க மாட்டேனு சொன்னீங்களே? விஜய் ரசிகர்களையும் மடக்க திட்டமா?

No comments:

Post a Comment

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...