
இப்படத்தினை விஷ்ணுவர்தன் தெலுங்கில் இயக்கி வரும் 'SHADOW' படத்தினை முடித்தவுடன் அஜீத்தை இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அஜீத், ஜெயம் ராஜா இணைந்து 'DOOKUDU' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கை தமிழில் பண்ண இருப்பதாகவும், அதை தான் ஏ.எம் ரத்னம் இயக்குவார் என்ற செய்தி கடந்த 2 நாட்களாக கோடம்பாக்கத்தை வலம் வருகின்றன.
இதுகுறித்து ஜெயம் ராஜா கூறியிருப்பது " 'வேலாயுதம்' மற்றும் 'மங்காத்தா' ஆகிய 2 படங்களின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது நானும் அஜீத்தும் சந்தித்தோம். அப்போது சாதாரணமாக பேசிக் கொண்டோமே தவிர, இருவரும் இணைந்து படம் பண்ணுவது குறித்து எதுவும் பேசவில்லை.
தற்போது எனது கவனம் முழுவது 'வேலாயுதம்' படத்தில் மட்டுமே இருக்கிறது. எனது அடுத்த படம் குறித்து இன்னும் நான் யோசிக்க கூட இல்லை " என்று தெரிவித்துள்ளார்.
நானும் அஜீத்துமா..?!
No comments:
Post a Comment