''திருப்பதியில சாமி கும்பிட்டு இறங்குறேன். 'சாமி’கிட்ட இருந்து போன்... 'ஹாய்... நாம உடனே மீட் பண்ணலாமா?’னு கேட்டார். அடுத்த அஞ்சு மணி நேரத்தில் அவர் முன்னாடி இருந்தேன். நான் சொல்றது கோடம்பாக்க 'சாமி’ விக்ரம்!''
விக்ரமை வைத்து 'ராஜபாட்டை’
அமைத்துக்கொண்டு இருக்கிறார் சுசீந்திரன்.
''முதல் சந்திப்பிலேயே ரொம்ப நாள் பழகின மாதிரி ஜாலியாப் பேசினார் விக்ரம். 'உங்களோட 'நான் மகான் அல்ல’ ரொம்பப் பிடிச்சது சுசீ. நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்’னார். அப்போ நான் விஜய் சாருக்காக ஒரு கதை ரெடி பண்ணிட்டு இருந்த விஷயத்தை விக்ரம் சார்கிட்ட சொன்னேன். 'அவர்தான் அடுத்தடுத்து புராஜெக்ட்ஸ் ரெடி பண்ணிவெச்சிருக்காரே... நாம இப்போ பண்ணலாம்’னார். இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் கூப்பிட்டு இப்படிக் கேட்டது எனக்குப் பெரிய ஆச்சர்யம். 'உடனே கிளம்பலாம் சார்’னு சொல்லிட்டேன். இதோ கிட்டத்தட்ட 'ராஜபாட்டை’ முடிஞ்சது!''
'' 'தெய்வத் திருமகள்’க்கு அடுத்து வர்ற 'ராஜபாட்டை’ விக்ரமுக்கு என்ன கலர் கொடுக்கும்?''
''38 கோடி ரூபாய் பட்ஜெட். என் கேரியர்ல பெஸ்ட் படம் சார். செம மாஸா ஒரு படம் அடிக்கணும்கிற என் கனவுக்குச் சரியான தீனி. 'பிதா மகன்’, 'தெய்வத் திருமகள்’னு அவரோட க்ளாஸிக் வரிசையில் நிச்சயம் 'ராஜபாட்டை’க்கு இடம் இல்லை. இது 'தில்’, 'தூள்’, 'சாமி’ லிஸ்ட்ல இன்னும் டாப் கியர் தட்டி எகிறும். அவருக்கு ஜிம்பாய் கேரக்டர். சினிமா ஸ்டன்ட் ஆளு. பேரே 'அனல் முருகன்’. முருகனோட லட்சியமே, சினிமாவுல பெரிய வில்லன் ஆகணும்கிறதுதான். படா நக்கல் பிடிச்ச ஆளு. யாருக்கோ உதவி பண்ணப் போய், உலகத்துக்கே நல்லது பண்ற ஆளு!''
''முழுக்கவே கோடம்பாக்கத்தைச் சுத்திச் சுத்தி நடக்கும் கதையா?''
''அதுதான் இல்லை. தினமும் காலையில பேப்பரைத் திறந்தா, நியூஸ் சேனலைத் தட்டினா, நில அபகரிப்புல 'அவர் கைது... இவர் கைது’னுதானே பரபரப்பு. கவுன்சிலர்ல இருந்து அமைச்சரா இருந்தவங்க வரைக்கும் அள்ளிப் போட்டுக்கிட்டுப் போகுதே போலீஸ்... அதுதான் விஷயம். இன்னிக்கு மிடில் க்ளாஸ் ஜனங்களோட பெரிய கனவு சொந்த வீடு. வாழ்க்கை முழுக்கச் சம்பாதிச்சு, ஆசை ஆசையா நிலம் வாங்கிப் பூரிக்கிறவங்க எத்தனை பேர் இருக்காங்க? அப்படி வாங்கிப் போட்ட நிலத்துக்குத் திடுதிப்புனு யார் யாரோ சொந்தம் கொண்டாடினா, எப்படி இருக்கும்? அதானே இன்னிக்கு நிறைய நடக்குது. அது ஒரு இருட்டு உலகம். அதுல புகுந்து வந்திருக்கேன். 'நான் மகான் அல்ல’ படம் காதலர்கள் எவ்வளவு ஜாக்கிரதையா இருக்கணும்னு சொல்லுச்சு. 'ராஜபாட்டை’ சொத்து வாங்குறதுல மக்கள் எவ்வளவு ஜாக்கிரதையா இருக்கணும்னு சொல்லும். நிச்சயமா நீங்களோ, நானோ ஒரு நாள் எதிர்கொள்ள வேண்டிய நிதர்சனம். அதை நிஜத்துக்குப் பக்கத்துல படமாக்கி இருக்கோம்!''
''தீக்ஷா சேத்னு புதுப் பொண்ணுபோல... இந்த மல்ட்டி ஸ்டார் டிரெண்டுல சிங்கிள் ஸ்டார் மட்டும்தானா?''
''படத்துல இருந்து நிறைய ஸ்டார்ஸ் மின்னும். தீக்ஷா தெலுங்குல ஹிட் ஹீரோயின். ரஷ் பார்க்கும்போது, எல்லா பெரிய ஹீரோக்களோடும் இந்தப் பொண்ணு ஒரு ரவுண்ட் நிச்சயம் வரும்னு தோணுச்சு. முக்கியமான தாத்தா கேரக்டரில் 'சங்கராபரணம்’ கே.விஸ்வநாத் நடிக்கிறார். இந்தியாவே கொண்டாடுகிற இயக்குநர் என் படத்தில் ஆசைப்பட்டு நடிக்கிறது எனக்குப் பெருமை!
பரபரக்குற ஆக்ஷனைப் பொறி பறக்கப் படம் பிடிச்சிருக்கு மதி கேமரா. படத்துக்கு யுவன் மியூஸிக். 'இறகைப் போலே’ பாட்டுதான் எங்களுக்குச் சவால். இதுல அதையும் தாண்டி இருக்கார் யுவன்.யுவன் - யுகபாரதி கூட்டணி அவ்வளவு யூத்தா இருக்கு. சந்தேகமே இல்லை... இளையராஜாவின் எளிய வடிவம்தான் யுவன்!''
No comments:
Post a Comment