Sponcer
Today's Quotes:
2 September 2011
தூக்கு தண்டனை பற்றி விவாதிக்கவில்லை: கருணாநிதி பேட்டி
சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பற்றி கவர்னருடன் விவாதிக்கவில்லை என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார். தி.மு.க., தலைவர் கருணாநிதி, ராஜ்பவனில் தமிழக கவர்னர் ரோசய்யாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் அவர் கூறுகையில், ரோசய்யா எனது நீண்ட கால நண்பர், தமிழக கவர்னராக பதவியேற்றுக்கொண்டதற்கு வாழ்த்து தெரிவிக்கவே வந்தேன். ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பற்றி விவாதிக்கப்படவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இதில் வேறு எதைப்பற்றியும் விவாதிக்கவில்லை என கூறினார். கருணாநிதியுடன் தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகனும் உடன் வந்தார். தி.மு.க., தலைவர் கருணாநிதி கவர்னருக்கு பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment