ரஜினியின் ராணா கதையிலோ காட்சி அமைப்பிலோ எந்த மாற்றமும் இல்லை என்றும்,
ஏற்கெனவே உருவாக்கப்பட்ட திரைக்கதையை மேலும் மெருகேற்றியுள்ளோம் என்றும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள ரஜினி, நீண்ட ஓய்வுக்குப் பிறகு இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
வரும் அக்டோபரில் ராணா படப்பிடிப்பு நடக்கும் என்றும் இதில் ரஜினி பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினி இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார். ஜோடியாக தீபிகா படுகோனே, இலியானா ஆகியோர் நடிக்கின்றனர்.
இரு நாயகிகளில் தாங்கள் நடித்துக் கொண்டிருக்கும் படங்களை சீக்கிரம் முடித்து விட்டு ராணா படத்துக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அவர்களும் அதை ஏற்று படங்களை வேகமாக முடித்து விட்டு ராணா படப்பிடிப்புக்கு வர உள்ளனர்.
இப்படம் சரித்திர கதை என்பதால் அதற்கேற்ப பொருத்தமான ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ரஜினியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ராணாவில் காட்சிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், ரஜினிக்கான சண்டைக் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான செய்திகளை பலமாக மறுத்துள்ளது இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் தரப்பு.
இந்தப் படத்தின் கதையில் எந்த மாறுதலும் இருக்கக் கூடாது என ரஜினி கூறிவிட்டதாகவும், சண்டைக் காட்சிகள் தொழில்நுட்ப உதவியுடன் சிறப்பாக எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரஜினியின் ஆலோசனையின் பேரில் திரைக்கதை மேலும் மெருகேற்றப்பட்டிருப்பதாகவும் இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment