'தடையறத் தாக்க' என்று ஒரு படம். அருண் விஜய் ஹீரோ. ஹீரோயினாக மும்பையைச் சேர்ந்த பிராச்சி தேசாயை
ஒப்பந்தம் செய்தனர். ராக் ஆன், லைஃப் பார்ட்னர் போன்ற இந்திப் படங்களில் நடித்துள்ளார் இந்த பிராச்சி.
இவரை ஏற்கெனவே தங்கள் படங்களில் நடிக்க வைக்க பல தமிழ் இயக்குநர்கள் முயன்றனர். ஆனால் அப்போதெல்லாம் மறுத்து வந்தவர், அருண் விஜய்யின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். பெரிய சம்பளம் பேசப்பட்டது. அட்வான்ஸையும் வாங்கி பெட்டியில் போட்டுக் கொண்டார்.
சில தினங்களில் படப்பிடிப்பு ஆரம்பித்தபோது, அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொந்த ஊரான குஜராத் போனவர்தான். வரவேயில்லை.
அதற்குள் அருண் விஜய் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை சுறுசுறுப்பாக முடித்துவிட்டார். இரண்டாவது ஷெட்யூலுக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் போன் செய்த அருண் விஜய்யின் லைனுக்கே வரவில்லையாம் பிராச்சி. தொடர்ந்து அவர் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பின்னர்தான் தெரிந்தாம் பிராச்சி பிரச்சினை செய்யக் காரணம், அருண் விஜய்யின் கேரியர் கிராப் மற்றும் ராசி பற்றி யாரோ புட்டுப் புட்டு வைத்துவிட்டார்களாம் அம்மணியிடம்.
இந்த திருப்பணியைச் செய்தது தமிழ் சினிமாவைச் சேர்ந்த சிலர்தான் என்று தனக்கு வேண்டியவர்களிடமெல்லாம் புலம்பியபடி, புதிய ஹீரோயின் தேட ஆரம்பித்துள்ளாராம் அருண் விஜய்.
No comments:
Post a Comment