Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

13 November 2011

பாலியல் சில்மிஷம் செய்த சிம்பு அன் கோ!

இளம்பெண்ணை கிண்டல் செய்து அவரது கணவரை தாக்கிய நடிகர் சிம்புவின் நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் நீலாங்கரையில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

அடிக்கடி பரபரப்பில் சிக்குபவர் நடிகர் சிம்பு. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நீலாங்கரை கடற்கரை அருகே உள்ள பப்புக்கு நண்பர்களுடன் சென்றார் சிம்பு. வசதி
படைத்தவர்கள் ஜாலியாக இங்கு வந்துபோவது வழக்கம். இப்போது சினிமா நட்சத்திரங்களும் வர ஆரம்பித்திருக்கின்றனர். வழக்கமாக இரவு 10 மணிக்கெல்லாம் மூடப்படும் இந்த பப், சினிமா நட்சத்திரங்கள் வருகைக்கு பிறகு நள்ளிரவு வரை இயங்குவதாக கூறப்படுகிறது.

தனியார் நிறுவன மேலாளர் நவீன் என்பவர், தன் மனைவியுடன் அதே பப்புக்கு சென்றிருக்கிறார். அங்கு நடந்த ஆட்ட விருந்தில் கலந்து கொண்டனர். அப்போது சிம்புவுடன் வந்திருந்த நண்பர்கள், நவீன் மனைவியின் அழகில் மயங்கி அவருடன் நடனம் ஆட விரும்பினார்கள். பின்னர் வம்படியாக அந்த பெண்ணை டான்ஸ் ஆட அழைத்தனர். இதற்கு நவீன் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் பிரச்னை ஏற்பட்டது. சிம்புவும் அவரது நண்பர்களும் அப்பெண்ணை கிண்டல் செய்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நவீன், அவர்களிடம் சத்தம் போட்டு தகராறு செய்தார்.
பின்னர் பப்பில் இருந்து கார் பார்க்கிங் சென்று சிம்புவின் நண்பர்கள் காத்திருந்தனர். நள்ளிரவு ஆட்டம் முடிந்து நவீன் வருவதை பார்த்த அவர்கள் மீண்டும் கிண்டலும், கேலியும் செய்துள்ளனர். இதையடுத்து இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. நவீன் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. உடனே உதவி உதவி என்று சத்தம் போடவே பப் ஊழியர்கள் அந்த இடத்துக்கு ஓடிவந்தனர். கூட்டமும் கூடியது. அவர்களை பார்த்ததும் சிம்புவின் நண்பர்கள் ஓடிவிட்டனர்.

இதுபற்றி நீலாங்கரை போலீசில் நவீன் புகார் கொடுத்தார். சிம்புவின் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக நீலாங்கரை சப் இன்ஸ்பெக்டர் பாலரத்னம் கூறும்போது, புகாரின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் 3 பேரை தேடி வருகிறோம் என்றனர்.

No comments:

Post a Comment

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...