Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

31 October 2011

நான் சிவாஜி, கமல் கிடையாது : ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் 2 மாதங்கள் சிகிச்சை பெற்று தமிழகம் திரும்பினார். அதன்பிறகு, ரஜினிகாந்த் யாரையும் சந்திக்கவில்லை, எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை.


இந்நிலையில் சினிமா துறையில் 75 திரைப்படங்களுக்கு மேல் இயக்கிய இயக்குனர் எஸ்.பி. முத்துராமனுக்கு சங்கர நேத்ராலயா சார்பில் 'சங்கர ரத்னா' விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென மேடைக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் அங்கு அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள்.

அவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் " சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். எனக்கு 'சங்கர ரத்னா' விருது வழங்கப்படுகிறது. அந்நிகழ்ச்சியில் நீ கலந்து கொள்ளாவிட்டாலும், உன் வாழ்த்து மடலையாவது அனுப்ப வேண்டும் என்றும், அதை மேடையில் மகிழ்ச்சியுடன் படிப்பேன் என்றும் கூறினார். அதற்கு நானும் சம்மதம் தெரிவித்தேன்.

பின்பு தான் யோசித்தேன், உடல் நிலை சரியான பிறகு, ஏதாவது ஒரு நல்ல நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன். அப்படிப் பார்த்தால், என்னை சினிமாவில் வளர்த்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தான் சிறந்ததாக இருக்கும். நான் முழுமையாக குணம் அடைய மக்களின் அன்பும், ரசிகர்களின் வேண்டுதலும் தான் காரணம். என்னை உருவாக்கிய ஜாம்பவான்கள் இருக்கிற இந்த மேடையில், நான் அதிகம் பேசினால், அது அதிகபிரசங்கித்தனம் ஆகிவிடும். எனக்கு வெற்றிப் படங்களை கொடுத்தார் என்பதால் மட்டும் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 25 படங்களில் நடிக்கவில்லை, அவர் மீது கொண்ட அன்பினால் தான் 25 படங்களில் நடித்தேன்.

என்னை உருவாக்கியவர்கள் என்னிடம் பேசும்போது, நீ தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்க வேண்டும், தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நான் சிவாஜியோ, கமல்ஹாசனோ கிடையாது. அவர்களை போல் நடிப்பாற்றல் எனக்கு கிடையாது. சினிமா துறையில் என் மூலதனம் என் உடலின் வேகம்தான். எனவே, என் உடலில் வேகம் இருக்கும் வரை நடிப்பேன். " என்று கூறினார்.

1 comment:

  1. உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

    Hot tamil actresses

    ReplyDelete

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...