Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

6 October 2011

உலகின் மிக மலிவான மடி கணிணி வெறும் 2000 ரூபாய்க்கு இந்தியாவில்

புது டெல்லி : உலகின் மிக மலிவான Tablet எனப்படும் குறுகிய மடி கணிணி வெறும் 2000 ரூபாய்க்கு இந்தியாவில் தயாராகி உள்ளது. இந்தியாவின் புகழ் பெற்ற ஐஐடியினரால் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட இக்கணிணியை மத்திய மனித வள அமைச்சர் கபில் சிபல் அறிமுகப்படுத்தினார்.

பிரதானமாக கல்வி பயன்பாடுகளுக்காக உபயோகப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள
இம்மடிக்கணிணி ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்க கூடியதாகும். 2 ஜிபி ப்ளாஷ் மெமரியும் 2 ஜிபி மைக்ரோ சிடி கார்டும் கொண்டுள்ள இது வை-பை வசதி கொண்டதுமாகும். மேலும் 32 ஜிபி வரை மைக்ரோ சிடி கொள்ளளவும் 2 முழு யுஎஸ்பி போர்டுகளும், ஒரு மினி எஸ்டி கார்ட் மற்றும் சிம் கார்டுக்கான ஸ்லாட்டுகளும் உள்ளது.

மேலும் ஆகாஷ் கணிணி 7 இன்ச் திரையும் சேட்டிங் செய்ய வசதியாய் மைக்ரோபோன் மற்றும் ஸ்டீரியோ போன்களுடனும் வருகிறது. மேலும் இது பன்னிரெண்டு மாத வாரண்டியுடன் வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இதன் பேட்டரி 3 மணி நேரம் சார்ஜ் பிடிக்க கூடியதாகவும் உள்ளது.

கல்விக்கான தேசிய மிஷன் எனும் திட்டத்தின் அடிப்படையில் நாட்டிலுள்ள 25,000 கல்லூரிகளையும் 400 பல்கலைகழகங்களையும் இ-லேர்னிங் எனும் மின்னஞ்சல் கல்வி மூலம் இணைக்கும் மத்திய அரசின் முயற்சியின் அங்கமாய் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பிடிஎப் ரீடர், வீடியோ கான்பரஸிங் வசதி, மீடியா ப்ளேயர், மல்டிமீடியா வசதி என பல்வேறு வசதிகள் உள்ளதால் சந்தையில் உள்ள விலை உயர்ந்த பிராண்டட் நிறுவனங்களின் குறு மடிக்கணிணிகளுக்கு இது பலத்த போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...