Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

28 September 2011

என் சாவுக்கு கூடுற கூட்டம்... - அஜித் உருக்கம்

என் சாவுக்கு கூடுற கூட்டம், அஜித்குமார் யார் என்று நிச்சயமா இந்த உலகத்துக்கு எடுத்துக் காட்டும், என்று நடிகர் அஜித்குமார் உருக்கமாக கூறியுள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், முதல்வர் ஜெயலலிதா பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில், அம்மா என் கல்யாணத்துக்கு வந்து
வாழ்த்தியதை எப்போதும் மறக்கவே மாட்டேன். அம்மாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு நானும் ஷாலினியும் போயிருந்தோம்.

சொந்த மகனைப்போல அப்போ பாசம் காட்டினாங்க, என்று கூறியுள்ளார்.

சினிமா விழாவொன்றில் எதிர்த்துப் பேசியதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரை மிரட்டியதாக கூறப்பட்டது குறித்த கேள்விக்கு, பதில் அளித்திருக்கும் அஜித், "ஜனநாயகப் பண்புகளை நம்புறவன் நான்.

அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எப்பவும் அதிகபட்ச மரியாதை கொடுப்பேன். என் மனசுல பட்டதை விழாவில் பேசினேன். அதுல எந்த உள்நோக்கமும் இல்லை.

என் திருமணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா நேரில் வந்து வாழ்த்தினார். அது எப்பவும் என் மனசில் நீங்காமல் இடம் பிடிச்சிருக்கும்" என்று கூறியிருக்கிறார்.

இப்போது தனக்கு 40 வயசாகிறது என்று கூறியிருக்கும் அஜித், இன்னும் 20-வருஷம் உயிரோட இருப்பேனானு கூட தெரியாது. ஒவ்வொரு மனுஷனும் எப்படி வாழ்ந்தான் என்கிற அடையாளம், அவன் சாவுக்கு கூடுற கூட்டத்தில்தான் தெரியும்னு சொல்வாங்க.

என் சாவுக்குக் கூடுற கூட்டம், அஜீத்குமார் யார்னு நிச்சயமா இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டும்," என்று உருக்கமாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...