வதந்தி வதந்தி என இத்தனை நாளும் மறுத்து வந்த சமாச்சாரம் இன்று உண்மையாகிவிட்டது. த்ரிஷாவுக்கு திருமணம்
செய்யப் போகிறார் அவரது அம்மா. மணமகன் பெயர் அம்ருத். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர்.
தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையான த்ரிஷா, நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. மிக பிஸியான நடிகையாக இருந்த அவர், இப்போது புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்வதில்லை. இருக்கிற படங்களை முடித்துக் கொடுப்பதில் தீவிரமாக உள்ளார்.
அவரது தாயார் உமா கிருஷ்ணன், த்ரிஷாவுக்கு இந்த ஆண்டு திருமணம் செய்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். த்ரிஷாவுக்கு ஹைதராபாத், அமெரிக்கா, சென்னை என பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்து வந்தார்.
இதனால் அவ்வப்போது த்ரிஷா திருமணம் குறித்து செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அதை த்ரிஷா மறுத்து வந்தார்.
இப்போது த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை யார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான அம்ருத் என்பவரைத்தான் திரிஷா திருமணம் செய்யப் போகிறார்.
அம்ருத் த்ரிஷாவுக்கு புதியவரல்ல. பெரும்பாலான பார்ட்டிகளில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
கடந்த வாரம் த்ரிஷாவுக்கு ஸ்டைல் நடிகை விருது கொடுத்த போதுகூட, அம்ருத்தும் உடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவருக்கும் வரும் செப்டம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2012 தொடக்கத்தில் திருமணம் நடக்கும் என தெரிகிறது.
No comments:
Post a Comment