Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

9 September 2011

விற்பனைக்கு வருகிறது யாஹூ!

Yahoo
சான்பிரான்ஸிஸ்கோ: தனது சிஇஓ கார்ல் பட்ஸை ஒரு போன்கால் மூலம் தூக்கியடித்த யாஹூ நிறுவனம், இப்போது விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாஹூவின் நிலைமை பெரும் நெருக்கடியில் உள்ளதாக வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர்.

கார்ல் பட்ஸ் கடந்த இரு ஆண்டுகளாக மிக மிக மோசமாகப் பணியாற்றியதாகவும், இதனால் நிறுவனத்தின் சொத்துக்கள் மதிப்பும் கூட வீழ்ச்சி கண்டுள்ளதாகவும்ய யாஹூ இயக்குநர் குழு கருதுகிறது.

அப்படியெனில், கடந்த இரண்டாண்டுகளுக்கும்மேல், இந்த இயக்குநர் குழு தூங்கிக் கொண்டிருந்ததா? சேர்மன் என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர் நிபுணர்கள்.

நிலைமையை சமாளிக்க உடனடியாக நிறுவனத்தைக் கைமாற்றிவிட யாஹூ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

காரணம், யாஹூவின் சரிந்துவிட்ட இமேஜை தூக்கி நிறுத்த அதன் வலுவான பிரிவுகளான மீடியா, செய்தி மற்றும் தொடர்புத் துறைகளில் மேலும் முதலீட்டை அதிகரித்தாக வேண்டும். புதிய டீம், தரமான சேவையை தந்துதான் இதனைத் தக்க வைக்க முடியும். இப்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள இடைக்கால சிஇஓ இதனை எந்த அளவு செயல்படுத்துவார் என முதலீட்டாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே இந்த சூழலில் நிறுவனத்தை விற்றுவிடலாம் என்ற முடிவை இயக்குநர் குழு ஏக மனதாக வரவேற்றுள்ளது. பொருத்தமான, தகுதி மிக்க வாங்குநர் வந்தால், ஏஎந்த நேரமும் யாஹூ கைமாறலாம் என்பதே இப்போதைய நிலைமை!

No comments:

Post a Comment

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...